Tamil Serial Rating : போச்சே சோல முத்தா இப்படி ஏமாந்துட்டிங்லே… இது மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வு

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஏது எப்படியோ பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வாழனும் அதுதான் எங்களின் ஆசை என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த சீன் வெள்ளிக்கிழமைதான் வரும் என்றும், ஒரு வழியா தெரிய வந்திருச்சி கண்ணம்மாவின் குழந்தை யார் என்று.. அப்படியே பாரதிக்கும் தெரியப்படுத்தினால் நல்லா இருக்கும்.. என கூறியுள்ளார். வேற லெவல் இருக்கப்போகிறது இப்ப பாரதிகண்ணம்மா சீரியல் யாருக்கு ரொம்ப பிடித்திருக்கு என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மேலும் பலரும் இந்த ப்ரமோவை பாராட்டியுள்ளனர்.

பாக்யலட்சுமி

ஆகமொத்தம் பாக்யாவ முன்னேறவிடக்கூடாது! இப்படி நெனக்கறது கோபி இல்ல! நம்ம டைரக்டர்தான்!! இந்த ட்விஸ்ட் தேவையில்லாத ஆணி!!! என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் போச்சே சோல முத்தா இப்படி ஏமாந்துட்டிங்லே…இது மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வு என கூறியுள்ளார். அந்த திருட்டு பயன் இங்கையும் வந்துட்டானா வாய்ஸ்சும் அதே மாதிரி இருக்கு என மற்றொரு ரசிகர் குறியுள்ளார். இது என்ன பாக்கியா அம்மாக்கு வந்த சோதனை பாவம் என்று கூறியுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஐஸ்வர்யா இப்படி பேசுவான யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் செஞ்சது தப்பு இதுல குரலை உயர்த்தி கேள்வி கேக்குராங்க பாரு என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யா ரொம்ப வொர்ஸ்ட் திமிர் பேச்சு என்று கூறியுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஆடி மாதம் முடிந்து ரொம்ப நாள் ஆச்சி இப்ப வந்து ஆடி மாசம்னு சொல்றீங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசகர் சரவணன் ஆசையில் ம் அள்ளி போட்டீங்களே சிவகாமி என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் சரவணனுக்கு அவங்க அம்மாதான வில்லி என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த ஆடி மாசத்த ஒரு வருஷத்திற்கு ஓட்டூவீங்களா என்று கேட்டுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அனு பற்றிய உண்மை எப்போ வரும் சன்டிவி என்று கேட்டுள்ளார். எப்ப சீரியல் முடியோதோ அப்பதான் அனுவை பத்தி தெரிய வரும். என ஒருவர் கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மறுபடியும் சோறு சோறு, கொழம்பு கொழம்பு, ரசம் ரசம்னு இப்பிடியே போங்கடா.. என கூறியுள்ளார். அஸ்வின் பூஜா பற்றின உண்மையாகத்தா இருக்கும் என ஒருவர் கூறியுள்ளார். அட போங்கடா… உண்மை னு சொல்வீங்க அப்புறம் மொக்கையா முடியும், என ஒருவர் கூறியுள்ளார்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம் ஹேமா யார் என்ற உண்மை தெரிய வருவதே இதற்கு முக்கிய காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என கூறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial rating update in tamil promo video

Next Story
Bigg Boss Tamil 5: நாட்டுப்புற கலைஞர், மாஸ்டர் நடிகர், இமான் அண்ணாச்சி… உள்ளே வந்த எதிர்பாரா பிரபலங்கள்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com