scorecardresearch

Tamil Serial Rating : நல்ல தீர்ப்பு சொன்ன ஜட்ஜம்மா நீங்க நல்லா இருக்கனும்… பாரதிக்கு செக்

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

Tamil Serial Rating : நல்ல தீர்ப்பு சொன்ன ஜட்ஜம்மா நீங்க நல்லா இருக்கனும்… பாரதிக்கு செக்

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாக்கலாம் இந்த ஒரு சீன எவ்ளோ நாள் ஓட்டுரிங்கனு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்தியால பல கோடி பேருக்கு கொரானா டெஸ்ட் எடுத்துடாங்க ஆனா இவருக்கு டிஎன்ஏ டெஸ்டு மட்டும் எடுக்கவே முடியல என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் நல்ல தீர்ப்பு சொன்ன ஜட்ஜம்மா நீங்க நல்லா இருக்கனும் என்று கூறிள்ளார். மற்றொரு ரசிகர் பழைய கண்ணம்மா இல்லாததால் சீரியல் பார்க்குற ஆர்வம் சிறிது குறைந்து விட்டது என கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் நல்ல சீன் என்று கூறியுள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சூப்பர் பாக்ய அம்மா இப்போதான் சரியா பேசிருக்கீங்க என்று கூறியுள்ளர். மற்றொ ரசிகர் இப்படியே ஒவ்வொரு சீனும் நல்லதா எழுங்க சீரியல் நல்லாருக்கும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் செழியன் திருந்திவிட்டாரா அவருக்கு ஏன் சப்போர்ட் பண்றீங்க என்று கேட்டுள்ளார். எல்லா சீரியல்லையும் இப்படி ஒரு பாட்டி ஏதாவது ஒருபிரச்சனையை கிளப்பி விடுவதே வேலை என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும்  பாக்யாவுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறியுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழும் சரஸ்வதியும்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மீனா சூப்பர் ஆக்டிங் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அண்ணா அண்ணி வந்த பிறகு சாப்பிடலாம் என்று கதிர் சொல்வது கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தை காட்டுகிறது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாவம் மீனா நீ உன்ன வச்சி காமெடி பண்றாங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மீனாவுக்கு ஆதரவாகவே கருத்துக்களை கூறியுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அர்ச்சனா நீயெல்லாம் உருப்படவே மாட்டே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ச்சனா செய்வது மட்டும் சிவகாமிக்கு தெரியவே மாட்டேன்குது என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இதுக்கும் காரணம் சந்தியாதான சிவகாமி அம்மா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சீரியல் முழுவதும் வில்லிக்கு சப்போர்ட்தான் என்று கூறியுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அனு இல்லாம இப்பதான் கொஞ்சம் நல்லா இருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் உலகமே அழிந்து போனாலும் இந்த கிழவி திருந்த போலதில்லை என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் கிழவி புதுசா அடுப்பங்கறைக்கு எல்லாம் போகுது. புது கதை இது தானா! என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர்  அண்ணா பூரணி கிளவி திருந்தவே திருந்தாது எவ்ளோ சொல்லியும் வேஸ்ட் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ரோஜா அன்னபூரணி காப்பாற்றியது சூப்பர் ஆனால் இந்த கிழவி நம்பவே நம்பது சுத்தமாக பிடிக்கால என்று கூறியுள்ளார்.

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன நடக்கும் வழக்கம் போல மாயன் மாஸ் காட்டுவார் போல என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த சின்ன பிரச்சனையெல்லாம் விட்டு சுவாரஸ்யமாக கொண்டுபோங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மாயனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இவ்வளவு நாள் பிரிந்து இருந்த பாரதி கண்ணம்மா இருவரும் 6 மாதம் சேர்ந்து இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியதை தொடர்ந்து அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மற்ற சீரியல்கள அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial rating update in tamil video promo