Tamil Serial Rating : ''அப்படியே புலி மாணிக்கத்தை ஏதாவது பண்ணுங்க சார்'' : ரோஜா ப்ரமோ ரியாக்ஷன்

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : ''அப்படியே புலி மாணிக்கத்தை ஏதாவது பண்ணுங்க சார்'' : ரோஜா ப்ரமோ ரியாக்ஷன்

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

இந்த ப்ரமேவைபார்த்த ரசிகர் ஒருவர் போன வாரம் கொண்டாட்டம், இந்த வாரம் திண்டாட்டம் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கண்ணன் இவ்ளோ பெரிய தப்பு பண்ணுவான் தனம் எதிர் பாத்துருக்க மாட்டாங்க இனி தனம் செண்டிமெண்ட் அழுகை காட்சிகள் ஆரம்பம் ஆகும் என கூறியுள்ளார். கல்யாணத்துக்கு தாலி வாங்க ஏது காசு ஒரு வேலை மூர்த்தி அண்ணன் வடை வாங்க குடுத்த 20ரூபாயே இருக்குமோ என பதிவிட்டுள்ளார். ரென்டு உதவாக்கரையும் பாண்டியன்‌பஸ்‌ வாங்கி ஓட்டுவாங்க இனிமே என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த நாடகத்தில் ஒருத்தர் கூட முறைப்படி கல்யாணம் பண்ண மாட்டாங்க போல என பதிவிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

பாக்கியலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் மாமியார் மருமகள் குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கடந்த வார ப்ரமோவில் கோபி ராதிகா இருவரையும் ஒன்றாக பார்த்த எழில் அடுத்து என்ன செய்வான் என்ன பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் இந்த வாரம் அந்த விறுவிறுப்பு சற்று கலையிழந்து விட்டதாகவே தெரிகிறது.

பாரதி கண்ணம்மா

இந்த பரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் வெண்பாவை திட்டி தீர்த்து வருகின்றனர். கடந்த வார ப்ரமோவில் பாரதி கண்ணம்மா இடையே முறிந்த காதல் மீண்டும் துளிர்விட்டது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் தற்போது பாரதி வெண்பா மீட்டிங் பழையபடி ரசிகர்களை சலிப்படைய செய்துள்ளது.

ராஜாராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சந்தியா வெற்றி பெற வேண்டும் என்றே கூறியுள்ளனர். ஒரு சிலர் சந்தியா வெற்றி பெற்றாலும், சிவகாமி கேரக்டர் அப்படிதான் இருக்கும் என்று பதிவிட்டுள்ளனர். கடந்த வாரங்களில் கடைக்கு சீல் வைத்த விவகாரத்தில் நல்ல பெயர் வாங்கிய சந்தியா அதனை மேலும் தொடரவே ரசிகர்கள் விரும்புவதாக கூறியுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் புலியும் இப்படி ஜெயிலுக்கு போனும்னு என பதிவிட்டுள்ளார். ரொம்ப நல்லா இருந்துச்சு அன்னபூரணி ஜெயிலுக்கு போனது அப்போது தான் ஜெயில் ஏப்படி இருந்தது என தெரியும். அர்ஜுன் சரியான தண்டனை வாங்கி கொடுட்டதுட்டிங்க என மற்றொரு ரசிகர் பகிர்ந்துள்ளார். மேலும் பலரும அண்ணபூரணி ஜெயிலுக்கு சென்றது குறித்து மகிழ்ச்சியே கூறியுள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது இன்று ரோஜா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்ப எழுந்துள்ளது என்று கூறலாம். அனு நடிப்பர், அண்ணபூரணி சிறைக்கு சென்றது குறித்த ப்ரமோ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றபடி அனைத்து சீரியல்களும் ரசிகர்களை திருப்திப்படுத்தும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News Tamil Serials

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: