Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.
சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் :
ஜனார்த்தன் பெருமை – மீனா மகிழ்ச்சி
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் வழக்கம் போல ஆதரவான கருத்தே தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் முடியலடா சாமி என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அருமை என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் கண்டன்ட் இல்லை னா போதும்.. வளைகாப்பு,காது குத்துன்னு எதையாச்சும் வச்சி உள்ள இறக்கி விட்டுறானுங்க என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர் இவ்ளோ கிராண்ட வளைகாப்பு வைக்கர அளவுக்கு பாண்டியன் ஸ்டோர் கிட்ட ஏதுடா காசு என பதிவிட்டுள்ளார். சூப்பர் சிங்கர் மற்றும் பாண்டியன் ஸ்டோர் மகா சங்கமத்திற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம் என பதிவிட்டுள்ளனர். மற்றும் பல ரசிகர்கள் கலாய்க்கும் அளவுக்கும், இந்த எபிசோடுகாக வெயிட் செய்வதாகவும் பதிவிட்டுள்ளனர்.
பாக்கியலட்சுமி :
பொய் சொல்லும் மருமகள் – மாமியார் ரியாக்ஷன்
இந்த ப்ரோமாவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆதரவான கமெண்ட்களை கூறி வருகனறனர். அதில் ஒரு ரசிகர் அம்மா பிள்ளை இப்படித்தான ப்ரண்டு மாதிரி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அப்பாடா அவங்க தாத்தா பாட்டியால கண்டுபிடிக்க முடியல பிள்ளை கண்டுபிடிச்சிட்டான் என்று பதிவிட்டுள்ளார்.
மற்றாரு ரசிகர் அம்மா பிள்ளை சூப்பர் என்று பதிவிட்டுள்ளார். இதில் மற்றொரு ரசிகர் எழில் உங்களுக்கு சப்போர்ட்தான பன்றான். அவன்கிட்ட சொல்ல வேண்டிதான நான் டூவீலர் ஓட்ட கத்துக்கிறேன்னு என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் விஜய் டிவில இப்போதைக்கு நல்ல போற சீரியல் பாக்கியலட்சுமி என்று பதிவிட்டுள்ளார்.
பாரதி கண்ணம்மா
ஹேமா உடல்நிலை – கண்ணம்மா மருந்து
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் பாரதிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். பபிள்கம் மாதிரி எவ்வளவு நாள் தான் இழுக்க போறீங்களோ, கடவுளே இதற்கு ஒரு முடிவே இல்லையா என்றுபதிவிட்டுள்ளார். இதற்கு மற்றொரு ரசிகர் இந்த சீரியல் 2030 வரைக்கும் போகும் என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர் சீக்கிரம் முடிங்கப்பா போர் அடிக்குது என்று பதிவிட்டுள்ளார். மேலும ரசிகர்கள் பவரும் இந்த சீரியல் ரொம்ப போர் அடிக்க்கிறது என்று பதிவிட்டுள்ளனர்.
ராஜா ராணி -2
சரவணன் – சந்தியா – புரிதல்
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் சரவணனை கலாய்த்து வருகிள்றனர். அதில் ஒரு ரசிகர் கொஞ்சம் ஜாலியா சீரியல் போனா நல்லாருக்கும் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் சிரிச்சி பேசுங்க சரவணன் என்றும், இதில் மற்றொரு ரசிகர் சரவணனுக்கு உண்மை தெரியா ரொம்பநாள் ஆகுமா என்றும், சந்தியா டைவஸ் பன்ன நினைக்கலனு சரவணன் எப்போதான் தெரியும் என்று பதிவிட்டுள்ளனர்.
ரோஜா
அர்ஜூன் – ரோஜா சிறையில் – சாக்ஷி பிளான்
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் செம்மையாக கலாய்த்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் அர்ஜூன் 2 நாள் தான் ஜெயில்ல இருக்காரு அதுக்குள்ள இவ்ளோ பேர சேத்துக்கிட்டாரா செம காமெடி என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் தெலுங்கு சினிமாவையே மிஞ்சிடுவாங்க போல என்று பதிவிட்டுள்ளார்.
இதில் மற்றொரு ரசிகர் ஆகமொத்தம் கதை வழி தெரியாத ஊருக்கு பொகுர வண்டி மாதிரி சுத்தி சுத்தி வந்து யூடர்ன் அடிச்சு ஆரம்பிச்ச இடத்தில் வந்து நிக்குது. இயக்குனர் வழி தெரியாத ஓட்டுநர் ஆகி ரொம்ப நாள் ஆச்சு. பாக்குர நாம தான் பாவம் என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் பாவம் ரொம்ப ஓட விடாதீங்க அர்ஜுன் வரணும் இடம் கரெக்டா செட் பண்ணுங்க சன் டிவி என பதிவிட்டுள்ளார்.
இந்த கருத்துக்களின் படி பார்க்கும்போது அம்மா பையன் நட்புறவுக்காக பாக்கியலட்சுமி சீரியலே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அவரவர் ரசிகர்களை திருப்திபடுத்தும். ஆனாலும் இதில் சீரியல்கள் ரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil