Tamil Serial Rating : ரோஜா மேலதான் கோபம் வருது, நாடகத்தை முடிங்க : ரசிகர்களை கடுப்பாக்கிய சீரியல்

Tamil Serial Update : தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் இன்று எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போமா?

Tamil Serial Rating Update : தமிழ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றனர். அந்த சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல. சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம்.

தறபோதைய நிலையில், புதிய சீரியல்கள் அதிகமான களமிறங்கி வருகின்றன. அதற்கான ப்ரமோக்களும் சீரியல் வெளியீட்டிற்கு முன்பே வெளியிட்டு அந்த சீரியல் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஒரு வகை எதிர்பார்ப்பை ஏற்படுத்துவத்ற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். இதில் ஏற்கனவே வெற்றிகரமான ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களுக்கும் அன்றைய எபிசோடுகள் குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சீரியல் என்று பெயர் பெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸின் தினசரி எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன என்றே கூறலாம்.

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் ஒரு சிலர் கிண்டல் செய்தாலும். பலரும் சகோதர்ர்களின் பாசப்பிணைப்ப்பை பாராட்டி வருகின்றனர். இதை பார்த்த ஒரு ரசிகர்கள் மை பேவரட் சீரியல் என்றும், மற்றொரு ரசிகர் குட் பிரதர்ஸ் என்றும் கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர்.

இதில் மற்றொரு ரசிகர் அச்சச்சோ இவன் எக்சாம் எழுதுனாலும் எழுதுனான் இவங்க பண்ற பில்ட்அப் தாங்க முடியலப்பா என்று பதிவிட்டுள்ளனார். மற்றொரு ரசிகர் கொஞ்சம் ஓவரா இருக்கு என்றும், இன்னொருவர் ஜீவா கதிர் என்று ஹார்ட் சிம்பலை பதிவிட்டுள்ளார். ஆனாலும் பாண்டியன் ஸ்டோர்ஸின் இன்றைய ப்ரமோக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பே கொடுத்துள்ளனர்.

பாக்கியலட்சுமி :

இல்லத்தரசி ஒருவரின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக வைத்து இந்த சீரியலுக்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியாகியுள்ள இந்த ப்ரமோவை பார்த்து ரசிகர் ஒருவர் பாவம் பாக்யா என்று கமெண்ட் கொடுத்துள்ளார். வீட்டிற்கு தெரியாமல் பைக் ஓட்ட கற்றுகொள்ளும் பாக்யா, பைக் டிரெயினிங்கில் செய்யும் செயல்கள் காமெடியாக இருக்கிறது. இதனை ரசிகர்கள் பலரும் காமெடியாக கலாய்த்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா :

கணவன் மனைவி இருவருக்கும் இடையில் நடக்கும் மோதல்போக்கே இந்த சீரியலின் முக்கிய கதைகளமாகும்.

வெளிநாடு செல்வதாக கிளம்பும் ஹேமாவை பாட்டி கட்டி பிடித்து அழுகிறாள். வழங்கமான செண்டிமென்ட் காட்சிதான் என்றாலும் பாட்டி மற்றும் பேத்தி இடையேயான பாசம் ரசிகர்களை ஒரு புது விருந்தாக அமையும்.

ராஜா ராணி 2 :

கணவன் மனைவி மற்றும் மாமியாரை மையப்படுத்தி இந்த சீரியலின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் தனது மனைவி தன்னை விவாகரத்து செய்யப்ப்போதாக நினைத்து சரவணன் அவளை விட்டு விலகி செல்ல, சந்தியா அவனுடன் நெருங்கி வருகிறார். கணவன் மனைவிக்கு இடையே நடைபெறும் வழக்கமான காட்சிகள் தான் என்றாலும் சீரியலில் பார்ப்பது சுவாரஸ்யணம் அதிகம் என்பதை இந்த சீரியலுக்கு பொருந்தும்.

ரோஜா :

ரசிகர்களின் மிக முக்கியமான சீரியல், டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் இந்த சீரியல், குடும்பத்திற்குள் நடக்கும் மோதலை மையப்படுத்தியது.

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சீரியலின் இயக்குநர் மீது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதை பார்த்த மற்றொரு ரசிகர் புது கான்செப்ட் கண்டு பிடித்து விட்டார்கள் இது போதும் பல வருடம் போகும் என் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ரோஜா வுகு இது எல்லாம் தேவதா அர்ஜுன் அவ்ளோ சொல்லி கேட்காம அணு வ ஜெயில் எடுக்க போனளே இது எல்லாம் உனக்கு தேவதா என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒரு ரசிகர் சந்திரகாந்தா மேடம் அதுக்குள்ள வீட்டுக்கு போயி துணி மாத்திட்டு வந்துட்டாங்க பாருப்பா என பதிவிட்டுள்ளார். இதில் ஒரு ரசிகர் அர்ஜூன் ரோஜா பெஸ்ட் ஜோடிகள். ஆனால் சேனலும் இயக்குநரும் ரொம்ப வொர்ஸ்ட் என்று பதிவிட்டுள்ளார். ஒரு ரசிகர் ரோஜா மேலதான் கோபம் வருது என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் தயவு செய்து இந்த நாடகத்தை முடிங்க என பதிவிட்டுள்ளார்.

இதற்கு மற்றொரு ரசிகர் மிகவும் ஆக்ரோஷமாக அணுக்கு பதில் ரோஜா விழுந்திருந்த இன்னைக்கே இந்த சீரியல் முடிஞ்சிருக்கும் இந்த ஆந்திரா குள்ள கத்திரிக்கா காக ஏன்டா அப்பாவி பெண்களை சாகுற மாதிரி காட்டுறீங்க என பதிவிட்டுள்ளார்.

இந்த 5 பரமோக்களிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் ரோஜா சீரியலுக்கே அதிக கமெண்டகள் வந்துள்ளது. அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பாசிட்டீவ் கமெண்ட்ன்ஸ் அதிகம் வந்துள்ள நிலையில், ரோஜா சீரியலுக்கு நெகட்டீவ் கமெண்ட்ஸ் அதிகம் வந்துள்ளது. இதில் இருந்து ரசிகர்களின் எதிர்ப்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கே உள்ளதாக கருதப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial rating update today episode

Next Story
Sun TV Serial; உயிருக்கு ஆபத்தான நிலையில் அனு… கைதாகும் ரோஜா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express