Tamil Serial Rating : பாக்யா அம்மாவுக்கு டவுட் வந்துடுச்சி... இனிமே பாருங்க ஆட்டத்தை...

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : பாக்யா அம்மாவுக்கு டவுட் வந்துடுச்சி... இனிமே பாருங்க ஆட்டத்தை...

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

Advertisment
Advertisements

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் தனத்துக்கு குழந்தை பிறக்குற வரைக்குமாவது உயிர கைல பிடிச்சுக்கோங்க. வெண்ணைய் திரண்டு வரும்போது தாழி உடைஞ்ச கதையா ஆயிடாம..... என கூறியுள்ளார்.மற்றொரு ரசிகர் கண்ணன பாக்காம லக்ஷ்மி அம்மா சாகமாட்டாங்க என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மேலும ரசிகர்கள் பலரும் இந்த பாட்டிக்கு எதுவும் ஆகலயா என்றே கருத்தக்களை பதிவிட்டுள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரைமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பல பெண்கள் இப்படித்தான் கணவனை மலைபோல் நம்பி இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இதுல இருந்தும் கோபி தப்பிச்சிடுவாரு அதான நடக்க போகுது என்று கூறியுள்ளார். மற்றொ ரசிகர் பாக்ய அம்மாவுக்கு டவுட் வந்துடுச்சி இனிமே ஆட்டம் ஆரம்பம் என்று பதிவிட்டுள்ளார். மேலும ஒரு ரசிகர் எப்படி இருந்தாலும் கோபி மாட்டமாட்டாரு அதான் நடக்கும் என்று கூறியுள்ளார்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் வெண்பா வில்லத்தனம் ஸ்டார்டிங்கா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இத இன்னுமாடா விட்டு வச்சிருக்கீங்க என்று கேட்டுள்ளார். இதுக்கு வேற வேலையே இல்லையா அடுத்தவங்க குடும்பத்தை கெடுக்கறதுதான வேலையாக ஒன்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். எல்லா சீரியலும் வில்லிக்கு சாதகமாகவே அமைகிறது என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த சீன் எல்லாம் பல படங்கள பாத்தாச்சு வேற ஏதாவுது புதுசா ட்ரை பண்ணுங்கள் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சந்தியாக்குள்ள இப்படி ஒரு அறிவா சூப்பர் என்று கூறியுள்ளார். நீ என்னதான் பண்ணாலும் சரவணன் உன்னை நம்பமாட்டான் சந்தியா என்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். பரவாயில்லை விழிப்புணர் தரும் சீன் என்று கூறியுள்ளார்.

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மாயன் சரியா நடிப்பு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த சீரியல் தான் ஏதே உருப்படியா இருக்கு மற்ற எல்லா சீரியலும் ஒரே ஸ்டோரிதான் என்று பதிவிட்டுள்ளார். இனி மாயன மாறன் இடையே மோதல் ஸஸ்டார்ட்டிங் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் வளர்த்த தாய்க்காக பெற்ற தாயிடம் சண்டை போடாதே மாயா என்று உரு ரசிகர் கூறியுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன நடந்தாலும் செம்பகம் ரோஜாவின் வீட்டுக்கு வரப்போவதில்லை.. இந்த டைரக்டர் எப்பயும் போல பல்ப் தான். .. எப்பயும் போல சென்பகம் தப்பி ஓடத்தான் போறாங்க என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ஜூன் சார் சூப்பர் மாஸ், என்றும், பலரும் கருத்தக்களை கூறி வருகின்றனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாக்யலட்சுமி சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். இதுவரை தன் கணவர் நல்லவர் என்று நம்பிக்கொண்டிருந்த பாக்யாவிற்கு தற்போது கணவர் மீது சந்தேகம் வர தொடங்கியுள்ளதே இந்த எதிர்பார்ப்பிற்கு காரணம். மற்றப்படி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: