Advertisment

Tamil Serial Rating : தவறை மறைக்க என்னெல்லாம் செய்கிறார் பாருங்க... ரசிகர்களிடம் மாட்டிய பாக்கியலட்சுமி கோபி

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : தவறை மறைக்க என்னெல்லாம் செய்கிறார் பாருங்க... ரசிகர்களிடம் மாட்டிய பாக்கியலட்சுமி கோபி

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் டேய், ரொம்ப பில்டப் கொடுக்காதீங்கடா! கல்யாணம் நடக்காதுடா! என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் பாவம் கனேசன் மாதிரி பாவம் கண்ணன் என பதிவிட்டுள்ளார். கதை இல்லை யா அடுத்து என்ன மகா சங்கமாமா ? எந்த சீரியல் ? என மற்றொரு ரசிகர் கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த 4 அடி ஐஸ் தவிர உங்களுக்கு வேற பொன்னே கிடைக்கலையா? என கேட்டுகள்ளார். இன்னுமாடா உங்க பஞ்சாயத்து முடியல என ஒரு ரசிகர் கேட்டுள்ளார்.

காதல் திருட சொல்லுது பொய் சொல்ல வைத்திருக்கிறது, குடும்பத்தையே எதிர்க்கிறது, குடும்ப கௌரவம் பத்தி கவலைப்படாம சுயநலமிக்கது ஆனாலும் புனிதமானது? என ஒரு ரசிகர் கேட்டுன்னார். மற்றொரு ரசிகர் ஆரம்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா தொடரின் விறுவிறுப்பு தற்போது இல்லை என பதிவிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ராமோவை பார்த்த பார்த்த ரசிகர் ஒருவர் பாவம் லட்சுமி  கண்ணம்மா பன்றது புடிக்கல என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஹேமா ஓவரா பண்ணுது என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு ரசிகர் ஹேமா ஓவர் ஆக்டிங என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் லட்சுமிக்கு ஆதரவாகவும் ஹேமாவுக்கு எதிராகவும் கமெணட் செய்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி

இந்தப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் கோபியை கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் தவறை மறைக்க என்னெல்லாம் செய்கிறார் பாருங்கள் என்று பலரும் கூறி வருகின்றனர்.

ராஜாராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சந்தியாவுக்கு சமையலே தெரியலனாலும் அவங்கதான் ஜெயிப்பாங்க! ஹீரோயின் ஆச்சே என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அஞ்சறை பெட்டி யா அது .. எங்க வூட்டு டிரெங்கு பெட்டி மாதிரி ல இருக்கு... என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன டா கடையில வாங்குன லட்டு மாதிரியே இருக்குது என கேட்டுள்ளார். சமையல் போட்டி இல்லாத நாடகம் விஜய் தொலைக்காட்சியில் பார்ப்பது அரிது என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இன்னும் ரெண்டு சாத்து ரோஜா. அர்ஜூன் பாலுக்கு பால் ஊத்துனா தான் அடங்குவான் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சாக்ஸி நீ எல்லாம் பொம்பள தாதாவா எப்ப பாரு ரோஜா கிட்ட தம்மு தும்முனு அடி வாங்குற என கேட்டுள்ளார். அர்ஜூன் பாலுவை தூக்கிட்டா போதும் அனு பாட்டி டைகர் ஆட்டம் கொஞ்சம் குறையும் என ஒரு ரசிகர் கூறியுள்ளார். இன்னும் இழுத்துகிட்டெ போங்க நாங்க அதையும் பார்த்து கி ட் டு தான் இருப்போம் ஏன் நாங்க ரோஜா லூஸ் என மற்றொரு ரசிகர் கூறியுள்ளார்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒன்றாக இருந்து லட்சுமி ஹேமா அடித்துக்கொள்வதும், பாரதி கண்ணம்மாவுடன் மீண்டும் இணைவதற்கான அறிகுறியும் சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது என்றே கூறலாம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment