இந்த ஐடியா ஏன் பாரதிக்கு தோணல... அவர் எதையுமே யோசிக்கவே மாட்டாரோ?

Tamil Serial Update : இந்த சீனுக்கும் இந்த சீரியலின் கதைக்கும் என்ற தொடர்பு. கண்ணம்மா சாமார்த்தியசாலி என்பதை நிரூபிக்க இந்த காட்சியா?

Tamil Serial Update : இந்த சீனுக்கும் இந்த சீரியலின் கதைக்கும் என்ற தொடர்பு. கண்ணம்மா சாமார்த்தியசாலி என்பதை நிரூபிக்க இந்த காட்சியா?

author-image
WebDesk
New Update
இந்த ஐடியா ஏன் பாரதிக்கு தோணல... அவர் எதையுமே யோசிக்கவே மாட்டாரோ?

Tamil Serial Bharathi Kannamma Rating Update : நல்ல வேலை செஞ்சீங்க கண்ணம்மா.. ஆனா பாரதிக்கு ஏன் இந்த ஐடியா தோனவே இல்ல அவரு யோசிக்கவே மாட்டாரோ என்று கேட்க வைக்கிறது பாரதி கண்ணம்மாவின் இன்றைய எபிசோடு.

Advertisment

விஜய் டிவியின் ப்ரைம்டைம் சீரியல் பாரதி கண்ணம்மா. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சந்தேக போராட்டத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் தொடக்கத்தில் சுமாரான வரவேற்பை பெற்றது. ஆனால் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறும்போது இந்த சீரியலுக்காக ரசிகர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.

ஆனால் தற்போது வீழ்ச்சியின் பாதைக்கு சென்றுகொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இதற்கு முக்கிய காரணம் ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் சீரியலே முடிந்துவிடும் ஆனா அதை செய்யாமல் இவ்வளவு நாளா இழுத்துக்கிட்டு போறீங்களே பாஸ், இப்படியே எத்தனை நாள் தான் ஓட்டுவீங்க என்று கேட்டு வருகிறார்ள் ரசிகர்கள்.

இதில் பாரதி சந்தேகப்படுவது தவறு என்று நிரூபிக்க கண்ணம்மாவும் முயற்சிக்கவில்லை, நமக்கு குழந்தை பிறக்காது என்று தெரிந்தும் வெண்பா ஏன் நம்மை கல்யாணம் செய்துகொள்ள நினைக்கிறாள் என்ற சந்தேகமும் பாரதிக்கு வரவில்லை. இந்த சந்தேகம் கண்ணம்மாவுக்கு வந்தால் கூட இந்த பிரிவுக்கு காரணம் வெண்பாதான் என்பது தெரிந்துவிடும்.

Advertisment
Advertisements

ஆனால் இதை தவிர மற்ற தேவையில்லாத காட்சிகள் எல்லாம் சீரியலில் வந்து போகிறது. இப்போது பாரதி ஒரு ஹாஸ்பிட்டலில் சீப் டாக்டராக இருக்கிறார். அங்கு அட்மின் ஆபீசராக கண்ணம்மா இருகிறார். ஒரு குழந்தைக்கு இதயம் தேவைப்படுகிறது. அங்கேயே மற்றொரு குழந்தை மூளை சாவு அடைந்துள்ளது. இந்த குழந்தையின் இதயத்தை மற்றொருகுழந்தைக்கு பொறுத்த பாரதி கேட்கிறார்.

ஆனால் இவர் கேட்கும்போது அந்த குழந்தையின் பெற்றோர்கள் மறுத்துவிடுகின்றனர். ஆனால் கண்ணம்மா இதயம் தேவைப்படும் அந்த குழந்தையின் பெற்றோரை இந்த மூளைச்சாவு அடைந்த குந்தையின் பெற்றோரிடம் பேச வைக்கிறார். அப்போது அவர்களும் ஒப்புக்கொள்கிறனர். இந்த ஐடியா ஏன் பாரதிக்கு தோன்றவில்லை.

அதே சமயம் இந்த சீனுக்கும் இந்த சீரியலின் கதைக்கும் என்ற தொடர்பு. கண்ணம்மா சாமார்த்தியசாலி என்பதை நிரூபிக்க இந்த காட்சியா? அப்படி என்றால் 8 வருடங்களாக அவர் சாமார்த்தியமாக வாழ்ந்து காட்டவில்லையா என்பது இயக்குநருக்கே வெளிச்சம். உண்மை உடைத்து அதன்பிறகு என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைப்பதை விட்டுவிட்டு இப்படியே இழுத்துக்கொண்டிருந்தால் டிஆர்பி எப்படி சார் எகிறும்?

மேலும் இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாரதியும் கண்ணம்மாவும் செத்து விட்டார்கள் என்று கதையை முடித்து விடுங்கள் சுத்தமா பார்க்கவே பிடிக்கவில்லை எனவும் மற்றொரு ரசிகர் கதையை எங்கெங்கோ திசை திருப்புறாங்க... கொஞ்சம் கூட நல்லாவே இல்லை..என்றும் கூறியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tv Serial Bharathi Kannamma Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: