Tamil Serial Pandian Stores Update : இன்றைய இளைஞர்களுக்கு தேவையான கருத்துக்களை எடுத்து சொல்லும் முக்கிய சீரியலகளில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான இந்த சீரியலில் சகோதரர்களின் ஒற்றுமை, கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவம், சகோதர பாசம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உள்ளிட்ட பலநிகழ்வுகளை வலியுறுத்தும் விதமாக கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சீரியலின் தினசரி எபிசோடுகள் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தி வரும் நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முன்னணியில் இருந்து வருகிறது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 4 சகோதரர்களுக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், 2 பேருக்கு குழந்தை இருக்கிறது. 3-வது சகோதரர் கதிர் முல்லை தம்பதிக்கு குழந்தை இல்லை.
கடந்த சில எபிசோடுகளாக இந்த டாப்பிக் முக்கியத்துவம் பெறுகிறது. வீட்டிற்கு வருபவர், போன் பேசும் தோழி என பலரும் முல்லையிடம் எதுவும் விஷேசம் இல்லையா என்று கேட்டு வருவது முல்லைக்கே பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஏப்பா முல்லைக்கும் குழந்தை பிறக்க போகிறதுனு சொல்லி ஒரு எபிசோடு போடுங்கப்பா என்று கேட்டு வருகின்றனா.
இதற்கிடையே தற்போது வீட்டிற்குள் நுழைந்துள்ள கண்ணனின் மனைவி ஐஸ்வர்யாவின் போக்கு, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மட்டுமல்லாது சீரியலை பார்க்கும் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இவர் எப்போது பெரிய குண்டு வீசுவார் என்ற படபடப்பும் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றாற் போல் ஐஸ்வர்யா பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கொஞ்சம் கடினமாகத்தான் வருகிறது
இந்நிலையில், குழந்தை இல்லை என்பதற்காக கதிரும் முல்லையும் ஹாஸ்பிடல் போகிறார்கள். அதற்கு தனம் மூர்த்தியிடம், கதிர் கடைக்கு வர லேட் ஆகும், என்று சொல்ல, மீனா கதிர் மூர்த்தி மாமாவுக்கே போன் பண்ணி சொல்லிருக்கலாமே என்று கேட்க தனம் ஏதோ சொல்லி மழுப்பிவிடுகிறார். இப்போது தனம் மீனாவிடம் பேசிக்கொண்டிருக்கும் ஐஸ்வர்யா கதிர் முல்லை ஹாஸ்பிடல் தான் போய்ருக்கிறார் என்று சொல்லி விடுகிறார்.
இதை கேட்டு தனம் கோபப்படுகிறார். அதன்பிறகு மீனா தனது அம்மாவிடம் முல்லை ஹாஸ்பிடல் போன விஷயத்தை சொல்கிறாள். அப்போது அங்கு என்ரி கொடுக்கும். ஐஸ்வர்யா முல்லை அக்கா ஹாஸ்பிடல் போறது உங்களுக்கு தெரிஞ்சா என்ன? ஏன் தனம் அக்கா உங்ககிட்ட மறைக்கனும் என்று கேட்டுவிடுகிறாள். இதை கேட்டு யோசிக்கும் மீனா என்ன இதை சொல்லி எனக்கும் அக்காவுக்கும் சண்டை மூட்டிவிட பார்க்குறீயா என்று கேட்கிறாள்.
அப்போது ஐஸ்வர்யா அப்படியெல்லாம் இல்லை அக்கா நீங்க சொல்ற மாதிரியெல்லாம் நான் நினைக்கவே இல்லை என்று சொல்லிவிடுகிறாள். இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யா தனது ஆட்டத்தை தொடங்கிவிட்டார். ஆனால் இதில் சிக்காமல் மீனா கிரேட் எஸ்கேப் என்று கூறி வருகினறனர். ஐஸ்வர்யாவினால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு எப்போதும் ஆபத்துதான் என்பது தற்போது உறுதியாகியுள்ளது என்றும் ரசிகர்கள் கூறி வருகினறனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil