/tamil-ie/media/media_files/uploads/2021/10/Tamil-Serials-3.jpg)
Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.
சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஐஸ்வர்யா ஆட்டம் ஓவரா இருக்கே எள்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படியே பேசிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம் நேர வீட்டுக்கு போய் டீ கொடுக்கத்துட வேண்டிதான என்று கூறியுள்ளார். தப்பு பண்ணிட்டோம்னு ஒரு வருத்தமே இல்லாமக இப்படி பண்ணுது என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யா ரொம்ப ஆடுது என்றே கூறியுள்ளனர்.
பாரதி கண்ணம்மா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இது கண்ணம்மாவின் கனவு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இன்னும் நீங்க என்ன பைத்தியக்காரனாவே நினைத்துக்கொண்டு இருக்கிறாயா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படியே போன இப்படி எத்தனை நாளைக்குத்தான் எல்லாதையும் கனவுலையே கமிச்சிக்கிட்டு இருப்பீங்க என்று கெட்டுள்ளார். மற்றொரு ரசிகர் டேய் போங்கடா பொம்மை துப்பாக்கி வச்சிக்கிட்டு காமெடி பண்ணிட்டு இருக்கீங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இது கனவு என்றே கூறியுள்ளனர்.
பாக்யலட்சுமி
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எழில் சரியாத்தான் சொல்கிறான் ஆனால் பாக்யா அதை கேட்க மாட்டாரே என்று கூறியள்ளார். மற்றொரு ரசிகர் வீட்டை விட்டு வெளியே சென்று தனியா வாழ்ந்து காட்டனும் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பாக்யாவ எப்போதான் தைரியமா பேச வைக்க போறீங்க டைரக்டர் சார் என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாக்யாவுக்கு ஆதரவாகவே கருத்துக்களை கூறியுள்ளனர்.
ராஜா ராணி 2
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் பரவாயில்லை இப்பவாது ரெண்டுபேரும் சந்தோஷமா இருக்காங்களே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இதற்கு சந்தியாதான காரணம் சிவகாமி அம்மா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படியே சந்தோஷமா கொண்டுபோன நல்லாருக்கும் என்று கூறியுள்ளனர்.
ரோஜா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் திவ்யாக்கு பிச்சைக்காரி வேஷம் சுப்பர் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் செண்பகம்மாவை. திவ்யா மிரட்டுவதை ரோஜா. பார்த்திருந்தால் சூப்பரா. இருக்கும் என கூறியுள்ளார். அர்ஜீனுக்கு செம்பகம் எல்லா உண்மைகளையும் சொன்னபடியால் திவ்யா ஒண்ணும் பண்ண முடியாது என ஒரு ரசிகர் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் திவ்யா கெட்டப் சூப்பர் என்றே கூறியுள்ளனர்.
இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். சௌந்தர்யா வெண்பாவை சுடுவது போன்ற காட்சியே இதற்கு முக்கிய காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.