New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/03/Pandian-Stors.jpg)
Tamil Serial Rating : நான் இங்கு இல்லை என்று யாருமே வருத்தப்படவில்லையா என்று ஜீவா கேட்க அனைவரும் சிரிக்கின்றனர்.
Tamil Serial Pandian Stores Rating Update : அடப்பாவிகளே ஜீவாவை இப்படி பண்ணீட்டீங்களே இனி என்ன நடக்குமோ என்று ரசிகர்களை புலம்ப வைத்துள்ளது பாண்டியன் ஸடோர்ஸ். இதுதான் சகோதர்களின் ஒற்றுமையா என்றும் கேட்க தோன்றுகிறது.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் சகோதரத்துவம், கூட்டு குடும்பத்தின் ஒற்றுமை உள்ளிட்ட பல இன்றியமையாத தேவைகளை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது ஆனால் இப்போது சகோதரத்துவம் காற்றில் பறந்ததுபோல் தெரிகிறதே என்ன செய்வது...
மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் என 4 பேர் கொண்ட இந்த குடும்பத்தில், திருமணத்தின் காரணமாக கண்ணன் சில நாட்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தது போல இப்போது ஜீவாவை குடும்பத்தை விட்டு பிரித்து வைப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு வருகிறது. ஜீவாவின் மாமனார் ஜனார்த்தனுக்கு நெஞ்சுவலி வந்ததால், ஹாஸ்பிட்லில் இருக்கிறார்.
அவரால் கடை வேலைகளை கவனிக்க முடியாது என்று சொல்லிவிட, ஜனார்த்தன் கடையை ஜீவா கவனிப்பார் என்று மூர்த்தி தனம் இருவரும் கூறி விடுகின்றனர். இதனால் அதிர்ச்சியாம் ஜீவா, அண்ணன் பேச்சை தட்டாமல் அங்கு செல்கிறான். ஆனால் மாமனார் கடைசியில், இருக்கும் ஜீவாவுக்கு வீட்டு ஞாபகமாக இருக்க பாண்டியன் சூப்பர் ஸ்டோருக்கு செல்கிறார்.
ஆனால் அங்கு ஐஸ்வர்யா பேங்க்கு செல்கிறார், மூர்த்தி பில் போடுகிறார் ஜீவாவுக்கு அங்கு வேலையே இல்லை. இதனால் அதிர்ச்சியடையும் ஜீவா எனக்கு இங்கு வேலையே இல்லையா என்று மூர்த்தியிடம் கேட்க இங்கு நீ இல்லை என்றால் எதுவும் நடக்காது என்று நினைச்சியா என்று எதார்த்தமாக கேட்க, ஜீவா அதை சீரியஸாக எடுத்துக்கொள்கிறான்.
அடுத்து சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வரும் ஜீவாவிடம், நீ அங்கேயே சாப்பிட்டுவிடு, என்று சொல்ல நான் இங்கு இல்லை என்று யாருமே வருத்தப்படவில்லையா என்று கேட்க அனைவரும் சிரிக்கின்றனர். இதனால் ஜீவா சங்கடமாக இருக்கிறான். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் முன்பு கண்ணன் இப்போ ஜீவா அடுத்து யாரோ என்று கேட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.