Tamil Serial Update : குடும்பத்தில் 4 மருமகள்கள் இருந்தூல் 4 பேருமே ஒரே மனதுடன் இருக்க வேண்டும். இதில் ஒருவர் கோப்பபட்டாலும், இழப்பு 4 பேருக்கும்தான். இதை தெளிவாக உணர்த்துவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ். 4 சகோதரர்களை மையமாக வைத்து குடும்ப கதையாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இதில் தனம், மீனா, முல்லை இவர்கள் 4 பேரின் ஒற்றுமையை பாராட்டாத ஆட்களே இல்லை என்று சொலல்லாம். சிலமுறை இவர்களுககுள் சண்டை வந்தாலும், தனம் அதை திறமையைான சமாளித்து மற்றவர்களை சமாதானம் செய்து விடுவார். அவருக்கு பக்கபலமாக மாமியார் லட்சுமி இருந்தார். ஆனால் இப்போது நிலைமை வேறாக மாறிவிட்டது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்குட்டி கண்ணன் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொள்ள, அந்த கவலையில் லக்ஷ்மி அம்மாவும் இறந்தவிட தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் பெரும் பிரளயத்தை சந்தித்து வருகிறது. திருமணம் செய்துகொண்ட கண்ணனம் ஐஸ்வர்யாவுடன் வீட்டிற்குள் நுறைந்ததே இதற்கு முழுமுதல் காரணமாக உள்ளது. ஐஸ்வர்யா நைட்டி அணிந்தது, மற்றவர்கள் பேச்சை கேட்காமல் நடந்துகொண்டது என பல பிரச்சனைகள் அரங்கேறியது.
இதில் குறிப்பாக மீனாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் தான் அதிக சண்டை வருகிறது. சின்ன சின்ன சண்டையாக இருந்தத தற்போது பெரிய பூதாகரமாக வெடித்துள்ளது. மீனா ஒரு சின்ன பிரச்சினையில் ஐஸ்வர்யாவை அறிவு இல்லையா என்று கேட்க, பதிலுக்கு ஐஸ்வர்யா மீனாவின் குடும்பத்தை பற்றி இழுக்க தற்போது இந்த பிரச்சனை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் நிம்மதியை கெடுத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஐஸ்வர்யா வந்து மன்னிப்பு கேட்டால் தான் சாப்பிட வருவேன் என்று சொல்லும் மீனாவை ஜீவா சமாதானதப்படுத்த முயற்சிக்கிறான். ஆனால் மீனா சமாதானம் ஆகாத நிலையில், ஐஸ்வர்யாவே மீனாவை சாப்பிட அழைக்க செல்கிறார். அப்போது மீனா செய்யுரத எல்லாம் செஞ்சிட்டு இப்போ வந்து நடிக்கிறியா என்று கேட்க இதை தனம் பின்னால் இருந்து பார்த்தக்கொண்டிருக்கின்றனர். இதனால் தற்போது எபிசோடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மீனா சொல்வது சரிதான் ஐஸ்வர்யா ரொம்ப ஓவர்தான் என்று கூறி வருகிறன்றனர். மற்றொரு ரசிகர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு ஐஸ்வர்யதான் பெரிய கண்டனம் என்று கூறி வருகினறனர். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படியே போய்கிட்டு இருந்தா எப்படி எதாவது பண்ணுங்க டைரக்டர் சார் என்று கூறியுளளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “