Tamil Serial Pandian Stores Update In Tamil : எல்லாம் ஆச்சு அடுத்து உங்க சண்டையா…. இந்த பிரச்சினை வச்சி இன்னும் ஒரு வாரத்துக்கு ஓட்டலாமே என்று சொல்ல தோன்றுகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக இந்த சீரியல் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் விதமாகதான் உள்ளது என்று சொல்ல வேண்டும். கூட்டுக்கு குடும்’பத்திற்கும் சகோதர பாசத்திற்கும் பெயர் பெற்ற இந்த சீரியலில் தற்போது ஒற்றுமையை விட வேற்றுமையே தலைவிரித்தாடுகிறது.
இந்த நிலைக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது கடைக்குட்டி கண்ணன். அவன் எப்போது ஐஸ்வயாவை திருமணம் செய்தானே அன்றிலிருந்தே பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு கண்டம் தொடங்கிவிட்டர். அதன்பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மா இறப்பு, கடை திறக்க தடை, உள்ளிட்ட ஏராளமான பிரச்சினை வந்தது. அதன்பிறகு அனைத்து பிரச்சினையும் சரியா சமாளிச்சி வந்தாச்சு இப்போ கடையும் திறந்தாச்சு.
இப்போ ஒரு புது பிரச்சினை கிளம்பியிருக்கு… இவ்வளவு நாள் மீனா ஐஸ்வர்யா சண்டை நடந்துகொண்டிருந்தது. ஆனா கடந்த சில நாட்களாக மீனாவும் ஐஸ்வர்யாவும ஒற்றுமையா பேசிக்கிட்டு இருக்காங்க அப்போ பல ரசிகர்கள் நினைத்திருப்பார்கள் அடுத்து வேற ஒரு பிரச்சினை வர போகுது என்று. அதுதான் இப்போ நடந்திருக்கு.
இதுவரை காலேஜ் போறது வீட்டுக்கு வரது என்று இருந்த கண்ணன், கடைக்கு போறது வீட்டுக்கு வருவதுமாக இருந்த ஐஸ்வர்யா இருவருக்கும் இப்போ ஒரு பெரிய சண்டை வந்துவிட்டது. கண்ணன் எதேர்ச்சையாக தண்ணீர் கேட்க நீ போய் எடுத்து குடினு ஐஸ்வர்யா சொல்ல, எனக்கு தண்ணீ குட தரமாட்ர அப்புறம் எப்படி எனக்கு மனைவியா இருக்க என்று கண்ணன் கேட்க, சண்டைடை முற்றுகிறது அதற்கு தனம் நிறுத்துங்க என்று சொல்ல ப்ரமோ முடிவடைகிறது.
ஐஸ்வர்யா வீட்டுக்குள் வரும்போதே ஏதோ நடக்க போகிறது என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இப்போ அது ரொம்ப தாமதமாக நடந்துள்ளது. கண்ணன் வீட்ல வெட்டிய இருக்கானு ஐஸ்வர்யாவுக்கே பொறாமையா அல்லது அவசரப்பட்டு நாம காலேஜ் போக மாட்டேனு சொல்லிட்டடோ என்று நினைத்துவிட்டாரா?
இவர்களுக்குள் என்ன பிரச்சினை என்பது தெரியவில்லை என்றாலும், அடுத்த சில வாரங்களுக்கு இவர்கள் பிரச்சினையே பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கிய எபிசோடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மந்தமாக சென்றுகொண்டிருப்பது தவிர்க்க முடியாத உண்மை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“