scorecardresearch

Tamil Serial Rating : இது நாள் வரைக்கும் ஆனந்தம் படம்… இனி சூரிய வம்சம்… வீழ்கிறதா பாண்டியன் ஸ்டோர்ஸ்?

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இனி ஐஸ்வர்யா கலெக்டர் ஆகணும் கண்ணண் பஸ் சர்வீஸ் நடத்தணும் அதானே உங்க ப்ளான் என கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த நாள் வரைக்கும் ஆனந்தம் கதை, இனி சூரிய வம்சம் கதை என கூறியுள்ளார். இந்த வாரம் தலையில தண்ணிவுத்துவீங்க அடுத்த வாரம் தலைவாழை இலை போட்டு விருந்து வைப்பீங்க என பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் டோண்ட் வொரி கண்ணா எல்லா சீரியல்லையும் இப்படி தான் சொல்லுவாங்க அப்புறம் சேத்துபாங்க இது தானே சீரியல்ல காலம் காலமாக நடக்குது என கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விமர்சிக்கும் அளவுக்கே கமெண்ட் கொடுத்துள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ஒரு ரசிகர் ஒரு அம்மாவின் வலி யாருக்கும் புரியவில்லை…. என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இங்கே நிஜ பாக்கியலட்சுமி நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாருக்கும் மனமார்ந்த நன்றிகள் என கூறியுள்ளார். இந்த உலகில் மண்ணைவிட்டு பிரியும் வரை ஓய்வின்றி உழைக்கும் ஒரு உயிர் அம்மா என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மேலும் பலரும் அம்மாவின் புகழ் பாடும் வகையில் கருத்தக்களை கூறியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இநத ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்ந்து பார்க்கும் பொழுது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது விரைவில் வெண்பாவின் சூழ்ச்சியை பாரதி புரிந்துகொள்ளவேண்டும் என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இத பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு… பாரதி கண்ணம்மா ஃபேன்ஸ் இதுக்கு லைக் பண்ணுங்க என கூறியுள்ளார். இப்போதான் கதை நல்லா போகுது அப்படியே அந்தக் டெஸ்டும் எடுத்து இருங்க என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். கண்ணம்மாவின் பார்வை பாரதியின் காதலை தூண்டுகிறது என மற்றொரு ரசிகர் கூறியுள்ளார்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அர்ச்சனா கையை மிதித்தற்கு பதிலா வாயிலேயே ஒன்னு எட்டி உதைத்து இருக்கணும் அப்போதான் வாய் பேசாமல் அமைதியா இருந்திருக்கும் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சீக்கிரம் சரவணனும் சந்தியாவும் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும் என கூறியு:ள்ளார்.

ரோஜா

இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் தயவு செய்து சீரியலை முடிங்க இதுக்கு மேலேயும் எங்க இதயம் தாங்காது சன்டிவி என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஐயோ மறுபடியும் முதல்ல இருந்தா…. ரொம்ப இழுக்குறீங்க என கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் அனு ஒரு தெய்வப்பறவியோ… பசி தாகம் இல்லை..தூக்கம் இல்லை..ஏன் ..பாதரூமுக்கு கூட போகும் அவசியமே இல்லாமல் கண்களைச் சிமிட்டாமல்அமர்திருப்பது எப்படி..அளந்துவிட ஒரு அளவு வேண்டாமா.. என கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சீரியல் குறித்து விமர்சனம் செய்யும் அளவிற்கே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது மீண்டும் ரொமான்ஸ் கலைகட்ட தொடங்கியுள்ள பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மற்றபடி அனைத்து சீரியல்களும அந்தந்த ரசிகர்ளை திருப்திப்படுத்தும் என கூறலாம். இதில் குறிப்பாக ரோஜா சீரியல் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial rating update with promo video