Tamil Serial Rating : இப்போ அதிகமா ரொமான்ஸ்தான் : முதலிடம் பிடிக்க ராஜா ராணி திட்டமா?

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பிரசாந்த் கோபம் நியாயமானது கண்ணை பேசவே விடலை அவன் என்ன சொல்ல வரான் கேக்க ஓருத்தரும் இல்லை என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் போதும் பிரசாந்த் அவளுக்கு அவ்வளவு சீன் கிடையாது போய் உன் வேலைய பாரு என பதிவிட்டுள்ளார். மற்றும் பல ரசிகர்கள் கண்ணனுக்கு சப்போர்ட் செய்யும் மீனாவை பாராட்டி வருகின்றனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாவம் பாக்யா அடிப்பட்டாங்க என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் பாக்ய சமைக்கலான நீங்க சமைங்க என்று பாட்டியை கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாக்யா பாவம் என்பது போலவே கருத்தக்களை பதிவிட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாரதி வீட்ல மாட்டிக்கிட்டார் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் சௌந்தர்யா அம்மா சூப்பர் என்று பதிவிட்டுள்ளார். மேலும் பலரும இந்த கதை இப்படியே தொடரட்டும் என்று பதிவிட்டுள்ளனர்.

ராஜாராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ராஜா ராணி எப்போமே ரொமான்ஸ்தான் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கீதா கோவிந்தம் படத்தை கொஞ்ம் மிக்ஸ் பண்ணுங்க என்று கூறியுள்ளார். நல்லாத்தான் போகுது இப்படியே கொண்டுபோலாம்தான் ஆனா கடைசியில டைவர்ஸ் மேட்டர சரவணன் மைண்டுக்குள்ள கொண்டு போய்டுவீங்களே என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் டைகர் மாணிக்கம் வாயில் என்னமோ அர்ச்சினை போடுவதை போல வாயை பொளக்கிறார் என கூறியுள்ளார். 1வருசம். அனு இப்படிதான் இருப்பார். 5 வருசம் கதை போகும் என மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். ஒருவழியா மானம் ரொசம் இல்லாம வீட்டுக்கு வந்துடிங்க அர்ஜுன் ரோஜா இனி என்ன நடக்கப்போகிறது என கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அனுவை அர்ஜூன சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த கருத்துக்களின் படி பார்த்தால் ராஜா ராணி சீரியலுக்கே எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதாக கூறலாம். கடந்த சில நாட்களாக சரவணன் சந்தியா இடையே உள்ள காதல் காட்சிகளே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial rating update with promo video

Next Story
ஜார்ஜியஸ் லுக்.. டாம்பாய் ஆயிஷாவின் பியூட்டிஃபுல் ஃபோட்டோஷூட் கலெக்ஷன்ஸ்!sathya serial ayesha
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express