Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.
சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணன் வீட்ல இருக்கும்போதேல்லாம் உங்களுக்கு கனவு வராதா என்று கேட்டுள்ளார். மேலும் ஒருவர் அவன் சொல்ல வந்தப்போ யாரும் கேக்கல.. கல்யாணம் பண்ணிட்டு வந்தப்போ ஏத்துக்கல ஆனா இப்போ மட்டும் கனவு வருது எப்படி இது என கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கண்ணன் திரும்பவும் வீட்ல சேக்கரத்துக்கு இது ஒரு வழியா என்று கேட்டுள்ளனர். மேலும் பலரும் கண்ணனுக்கு ஆதரவாகவே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
பாரதி கண்ணம்மா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எல்லாரும் உன்மேல பாசமாதான் இருக்காங்க ஆனா அவங்க பாசம்தான் உனக்கு புரியல என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தா பாசம் இருக்கா இல்லையானு தெரிஞ்சிடும் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாரதி இப்படி வெண்பாகிட்ட புலம்புரது யூஸ்லெஸ் என்று பதிவிட்டுள்ளனர்.
பாக்யலட்சுமி
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவரு ஆமா இது தான் வேல ஏன் சார் சும்மத அரைச்ச மாவையே திரும்ப திரும்ப அரைக்கிரீங்க என்று கேட்டுள்ளார். அதில் ஒரு ரசிகர் இப்படியெல்லாம் கேட்டாலும் கோபி திருந்தமாட்டார் என்று கூறியுள்ளார். மேலும் பலரும் கோபிக்கு எதிராகவே கமெண்ட் கொடுத்துள்ளனர்.
ராஜா ராணி 2
இந்தப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் உங்க வீட்ல உள்ள அர்ச்சனாதான் எல்லாத்துக்கும் காரணமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ஒரு நல்லது நடந்த அதை கெடுக்க பலபேர் வருவாங்க அதுல ஒரு ஆள்தான் அர்ச்சனா என்று கூறியுள்ளார். மேலும் பலரும் அச்சனாவுக்கு எதிரானவே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
ரோஜா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் நீங்க இப்படியோ சுத்திட்டு இருங்க அனுவும் இப்படியே எல்லாம் செஞ்சிட்டு இருக்கட்டும் என்று கூறியுள்ளார். இதே மாதிரி இன்னும் பல வருஷம் ஓட்டுங்க என்று பதிவிட்டுள்ளார். மேலும் பலரும் சீக்கிரமா கண்டுபிடிச்சி நாடகத்தை முடிங்கப்பா என்று கூறியுள்ளார்.
இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. லட்சுமி ஹேமா என இரு குழந்தைகளை மையப்படுத்தி கதை நகர்ந்து வரும் இந்த சீரியல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதே இதற்கு மக்கிய காரணமாக உள்ளது. மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil