Tamil Serial Rating : அன்னைக்கு வீர வசனம் பேசுனீங்களே கோபி... இன்னைக்கு இப்படி ஆகிட்டீங்களே...

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Serial Rating : அன்னைக்கு வீர வசனம் பேசுனீங்களே கோபி... இன்னைக்கு இப்படி ஆகிட்டீங்களே...

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

Advertisment
Advertisements

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணன் மேல கோபம் இருந்தாலும் எல்லாரும் மறைமுகமா உதவி செய்றீங்க என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் மீனா நீங்க நல்லவரா கெட்டவரா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மீனாவும்பாராட்டு தெரிவித்து வருகின்றனா. கண்ணன் திருமணத்திற்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சற்று விறுவிறுப்பு குறைந்துள்ளது என்பதே ரசிகர்களின் முக்கிய கருத்தாக உள்ளது.

பாரதி கண்ணம்மா

இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் லக்ஷ்மி யாரே ஒருத்தர் பொண்ணுனு இருந்தபோ பாரதி பாசம் காமிச்சாரு இப்போ கண்ணம்மா பொண்ணுனு தெரிஞ்சரும் வெறுப்ப காமிக்கராரு என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பாரதிக்கு தான் சொந்த பொண்ணுதான்னு தெரிஞ்சா என்ன பண்ணுவாரு என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இதெல்லாம் கரக்டா பண்ணு அந்த டிஎன்ஏ டெஸ்ட் மட்டும் மறந்துடு என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பரதியை விமர்சனம் செய்தே கருத்தக்களை பதிவிட்டுள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாக்யாவுக்கு எவ்ளோ அடிப்பட்டாலும் யாரும் கண்டுக்க மாட்டாங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கோபி அன்னைக்கு வீர வசனம் பேசுனீங்களே இப்போ என்னாச்சி என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் பாவம் பாக்யா அம்மா அவங்கள யாருமே புரிஞ்சிக்க மாட்ராங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாக்யாவுக்கு ஆதரவாகவே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரேமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சரவணன் குக் வித் காதல் சூட்டிங் போய்ருப்பாரு என்றுபதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் உங்க வீட்ல எப்போதான் பிரச்சனை இல்ல எல்லா நாளும் ஏதாவது ஒரு பிரச்சனைய கிளப்புறீங்க என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் சந்தியாகிட்ட சொல்லாம சரவண ஊரை விட்டே போய்ட்டாரா என்று கேட்டுள்ளார். சரவணன் ஊருக்கு பொய்டாரு நாடகத்தை முடிங்க என்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஒரே ஒரு கொலை அத கண்டுபிடிக்க அனுமான் வாலு மாதிரி நீண்டுகொண்டே போகுது... என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் உங்க ஆட்டம் எல்லாம் நல்ல தான் இருக்கு ....ஆனா என்ன ஆடினாலும் பிரியா எந்திரிச்சு ஓட போரது இல்ல.....மக்கு மாணிக்கம் தான் வராரு உங்களுக்கு வேட்டு வைக்க! என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கதைய மாத்துங்க ரொம்ப போர்அடிக்கிது . அரைத்த மாவையே அரைத்துகிட்டு இருக்கீங்க என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த மொபைல் ஆதாரத்தை அர்ஜுன் நேர போலீஸ் இட்டபோய் கொடுப்பாரு என பதிவிட்டுள்ளார்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது பாக்யலட்சுமி சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். பாக்ய அடிப்பட்டதும் அவரை கவனிக்காத குடும்பம் கோபியை அதிகமான கவணிக்கிறது இதற்கு எழில் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பே இதற்கு காரணம் என்று கூறலாம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: