Advertisment

Tamil Serial Rating : வேலை இல்லாம உன்ன யாருப்பா கல்யாணம் பண்ணிக்க சொன்னா... இது தேவையா கண்ணா?

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : வேலை இல்லாம உன்ன யாருப்பா கல்யாணம் பண்ணிக்க சொன்னா... இது தேவையா கண்ணா?

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கல்யாணம் பண்ணிக்கிட்டு தனி குடித்தனம் போறவங்க எல்லார் நிலைமையும் இப்படித்தான் இருக்கும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாவம் கண்ணன் என்றும் மேலும் ஒரு ரசிகர் வேலை இல்லாம உன்ன யாருப்பா கல்யாணம் பண்ணிக்க சொன்னா என்று கேட்டுள்ளார். மேலும் பலரும் கண்ணன் ஐஸ்வர்யா விரைவில் வீட்டோடு இணைய வேண்டும் என்றே கூறியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் இனிமேதான் ஆட்டம் இருக்கு என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படித்தான் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றுவீர்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கண்ணம்மா இனிமே என்ன செய்வர் என்று எதிர்பார்ப்பதாகவே கருத்தக்களை பதிவிட்டுள்ளனர். மற்றாரு ரசிகர் ஒருவர் பாரதிக்கு அங்க வேலையே இல்லையே வீட்லதான் வேலை இருக்கு என்று பதிவிட்டுள்ளார்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஏன் பாக்யா அம்மா பொய் சொல்றீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கோபி மாட்டிருப்பாரு இந்த மேனேஜர் எச்சரிக்கை பண்ணிட்டாரு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கோபி எப்போதான் மாட்டுவாரு டைரக்டர் சார் என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படித்தான் நடக்கும்னு எங்களுக்கு முன்னாடியே தெரியுமே என்று கூறியுள்ளார்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பொறி வச்சி புடிச்சிட்டீங்களாஎன்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் சந்தியாவின் தைரியத்தை பாராட்டியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் எல்லா பெண்களும் இப்படியே இருந்துட்ட ஊருக்குள்ள ஒரு தப்பும் நடக்காது என்று கூறியுள்ளார். மேலும் பலரும் சந்தியாவுக்கு பாராட்டுக்களே தெரிவித்து வருகின்றனர்.

ரோஜா

இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர், நீங்கள் இப்படியே திட்டத்தை நிறைவேற்றுங்கள் இதை பார்க்கும் ரசிகர்களுக்கு பைத்தியம் பிடிக்க போகுது அதில் எந்த மாற்றமும் இல்லை  என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சீ ரோஜா சீரியல் இப்போல்லாம் அது மதிப்பே அதுவே குறைத்து கொள்கிறது என்று கூறியுள்ளார். மறுபடியும் முதல்ல இருந்தா .... நாங்க ரொம்ப பாவம்டா.. இதுக்கு கொரனாவே மேலு என கூறியுள்ளா. மேலும் பலரும் விமர்சனங்களையே கருத்துக்களாக கூறியுள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். கண்ணம்மா தனது குழந்தை குறித்து தனது மாமியாரிடம் எப்போது கேட்பார் என்று எதிர்பார்ப்பே இதற்கு காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment