Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.
சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.
பாரதி கண்ணம்மா
இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் நாங்களும் கடைசியா கேக்குறோம் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பீர்களா மாட்டீர்களா என கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த துணிச்சல் திமிர் தான் கண்ணம்மா என கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இவ்வளவு தூரம் வந்து, ரெண்டாவது பாப்பா எங்கனு கேட்காம போறியேமா என கேட்டுள்ளார். 5 நிமிசம் பேசி முடிக்க வேண்டிய ப்ரசனைய 1 வருசமா இழுக்குறீங்க என ஒரு ரசிகர் கூறியுள்ளார். மேலும் பலரும் கண்ணம்மாவின் தைரியத்தை பாராட்டும் விதமாக கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
நாம் இருவர் நமக்கு இருவர்
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மாயன் vs மாறன், இரண்டு கேரக்டரும் நடிப்பும் அருமை என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இது தான் எங்க மாயனோட அன்பு என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் தம்பி நீ பொழப்புக்கு ரவுடி எங்க மாயன் பொறந்ததில இருந்தே என கூறியுள்ளார். எந்த கேரக்டர் வந்தாலும் எங்க மாயனுக்கு ஈடாகாது நாங்க எப்பவும் மாயன் பக்கம் தான் என ஒரு ரசிகர் கூறியுள்ளார். விஜய் டீவில உருப்படியான சீரியல்ன்னா இது மட்டும் தான் சூப்பர் சீரியல் என மற்றொரு ரசிகர் கூறியுள்ளார்.
ரோஜா
இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மறுபடியும் முதல்ல இருந்தா போதும் சோனமுத்தா என பதிவிட்டுள்ளார். அதில் ஒரு ரசிகர் என்னங்கடா 920 எபிஸோடு ஒடுன கதைய இப்படி 58 செகண்ட்ல சொல்லிடிங்க என கூறியுள்ளார். இதெல்லாம் ஒரு ப்ரமோவா? இன்னும் எத்தனை நாள் தான் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருப்பீர்கள் என ஒருவர் பதிவிட்டுள்ளார். கோடி வருடங்கள் ஆனாலும் இந்த சீரியலுக்கு முடிவு இல்லை என்று கூறியுள்ளார். ஏன்பா..... இன்னும் சண்டை, பரிகாரம் சீன் எதுவும் சிக்கவில்லை போல....ஒரு ரசிகர் கூறியுள்ளார்.
இந்த கருத்தக்களின்அடிப்படையில பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது என்று கூறலாம். லட்சுமி என் பொண்ணுதான் என்று கண்ணம்மா பாரதியிடம் சொல்லிட்ட நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதாபார்ப்பு நிலவி வருகிறது. மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்ந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என கூறலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.