Tamil Serial Rating : நாடகத்தில் பரிகாரம் இருக்கலாம்… ஆனால் பரிகாரமே, நாடகமா இருந்தால் எப்படி?

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் நல்லாத்தான போய்கிட்டு இருந்துச்சு அதுக்குள்ள ஏன் இப்படி பண்ணீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ஏம்பா வீட்ட விட்டு வெளியேறி வந்து சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறப்ப அந்தம்மா எப்ப பார்த்தாலும் மேக்கப்-லயே இருக்கு? கொஞ்சமாவது லாஜிக்கா போடுங்கப்பா… என கூறியுள்ளார். கண்ணன் வீட்டை விட்டு வந்து ரெண்டு வாரம் ஆச்சு இன்னும் ஒரு வேலைக்கு கூட போகல வேலைக்கு முயற்சியும் பண்ணல. சாப்பாட்டுக்கே கஷ்டம் எப்போதான் கண்ணன் வேலைக்கு போவான் என்று கேட்டுள்ளார்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அந்த புது புடவையை கட்டிட்டு வந்திருந்தால் இன்னும் சூப்பரான சீன் ஆகிருக்கும் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஒருவர் இந்த இடத்தில் தலைவன் கோபி வந்தா வேற லெவலா இருக்கும் என கூறியுள்ளார். பிள்ளைகளுக்காக தன்னை அர்ப்பணித்த அத்தனை தாய் மாறுதலுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. என பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அம்மாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் வானத்தைபோல என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சூப்பர் சீன் என்று பதிவிட்டுள்ளார். இது எல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கு என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சூப்பர் என்றே கருத்துக்களை கூறியுள்ளனர். கடந்த சிலவாரங்களாக பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இதெல்லாம் நல்லா பண்ணுங்கள் ஆன சந்தேக புத்தி மட்டும் போகவே போகாது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படியோ போனா நல்லாத்தான் இருக்கும் ஆனா அப்படி பண்ணமாட்டீங்களே என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சீரியல் விறுவிறுப்பை இழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எங்கள பாத்தா இவனுங்களுக்கு எப்படி தெரியுது போதும் டா சாமி ஆள் விடுங்க என கூறியுள்ளார். நாடகத்தில் பரிகாரம் இருக்கலாம். ஆனால் பரிகாரமே, நாடகமா இருந்தால் எப்படி? கதை இல்லாம பரிகாரம் மட்டுமே ஒரு 500 எரிசோடு ஓடியிருக்கும் என கூறியுள்ளார். பூஜ பரிகாரம் இன்னும் என்னன்னலாம் நடக்கும்போதே கடைசியில் அர்ஜுன் ரோஜாவுக்கு எதிராகத்தான் இருக்கும் அனுவுக்கு சாதகமாக முடித்துவைபார் நம்ப டைரக்டர் என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சீரியலின் பரிகாரம் குறித்து விமர்சிக்கும் அளவுக்கே கமெண்ட்கொடுத்துள்ளனர்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது பாக்யலட்சுமி சீரியலுகே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். அம்மா என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு காட்சி வரும்போது அவர்களிடம் இருந்து அதிகளவு ஆதரவு கிடைக்கும்அதுவே இந்த எதிர்பார்ப்பிற்கு காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்ந்த ரசிகர்கள் திருப்திப்படுத்தும் என நம்பலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial rating update with promo video

Next Story
Vijay TV Serial; கண்ணம்மா பக்கத்தில் அமர்ந்து சாப்பிடும் பாரதி… எரிச்சலில் வெண்பா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express