Tamil Serial Rating : நீங்க சீரியலை முடிச்சிட்டு வீட்ல போய் சண்டை போடுங்க… கதையே இல்லாம சோதிக்கிறீங்க…

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்யடின் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மீனா நடிப்பு சூப்பர் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் எல்லாம் மூர்த்திக்கும் தெரிஞ்ச ரகசியம் தான். அவனுக்கு தெரிஞ்சது உங்களுக்கு தெரியல என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மீனா எப்போமே இப்படித்தான் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மீனா நல்ல நடிப்பு என்றே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இப்படித்தான் நடக்கும்னு எங்களுக்கு முன்னாடியே தெரியுமே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இனியா இப்போ மட்டும் எப்படி உங்களுக்கு சிரிப்பு வருது என்று கேட்டுள்ளார்.  மேலும் ரசிகர்கள் பலரும் இதுதான் எங்களுக்கு முன்னாடியே தெரியுமே அடுத்த சீன்னுக்கு வாங்க என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அய்யோ எனக்கு இனியாவை கொலை பண்ணனும் போல இருக்கு.ஒரு தாய்க்கு பொண்ணு போலவே இல்லை..மகா கேவலமான சித்தரிப்பு என கூறியுள்ளார்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஏன் கண்ணம்மா இப்படி கோபப்படுறீங்க என கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் பாரதி மேல இருக்க கோவத்த இப்படி காமிக்கிறீங்களா என்று கேட்டுள்ளார். கடந்த சில வராங்களாக அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியல் இனிவரும் எபிசோடுகள் போர் அடிக்கும் என்பது போல ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் உங்களுக்கு வெற வேலையே இல்லையா எப்போ பார்த்தாலும் ஏதாவது ஒரு சண்டைய மூட்டிகிட்டே இருக்கீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் நல்லவங்க உண்மையான வாழ்க்கையில் தான் கஷ்டப்படராங்க பாத்தா சீரியலிளுமா டா என கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் நீங்க சீரியலை முடிச்சிட்டு வீட்ல போய் சண்டை போடுங்க கதையே இல்லாம வெறும் சண்டையே போட்டக்கிட்டு இருக்கீங்க என்று கூறியுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாலு யசோதா மட்டும் பால் கொடுத்த பாத்தாது அர்ஜுன் அன்னபூரினிக்கும் கொடுத்திருந்தா இன்னும் டபூள் சூப்பர் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாட்டியின் அனைத்து யுத்த தந்திரங்களும் வீண் ஆனதே என கூறிள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அர்ஜூன ரோஜாவுக்கு பாராட்டு தெரிவித்தே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாக்யலட்சுமி சீரியலுக்கே அதிக வரவேற்பு இருக்கும் என்று கூறலாம். ஸ்கூல் பங்ஷனில் பாக்யா பரிசு வாங்கும் காட்சிக்காகவே ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதுவே இந்த எதிர்பார்ப்பிற்கு காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்நதந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial rating update with promo video

Next Story
Vijay TV Serial; வெண்பாவுக்காக குடும்பத்தை எதிர்க்கும் பாரதி… லட்சுமியை திட்டும் கண்ணம்மா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com