New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/Tamil-Serials1.jpg)
Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது
Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.
சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அம்மா கேரக்டரை க்ளோஸ் பண்ண போறாங்களே எள்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் தனமும் அவங்க அம்மா கேரக்டரும் ஓவர் ஆக்டிங் என்று கூறயுள்ளார். கண்ணன் இல்லாம அப்பாவோ நினைவுநாளா என்று மற்றொரு ரசிகர் கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ஆளுக்கு 50 ரூபா வாங்கிட்டீங்க பரவாயில்லை முதல் சம்பாத்தியம் என்று கூறியுள்ளார். எப்படியோ ரெண்டுபேரும் வேலை செஞ்சி படிச்சி முன்னுக்கு வந்து பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு எதிராக கடை வைங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அம்மா கேரக்டரை காலி செய்ய போறாங்களா என்று கேட்டுள்ளனர்.
பாரதி கண்ணம்மா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சேம் ஸ்டோரி எல்லா சீரியலிலும் ஒரு எபிசோடுகதான் ஓடிக்கிட்டு இருக்கு என்று கூறியுள்ளார். அப்போ எப்போதான் சொல்ல போறீங்க என்று ஒரு ரசிகர் கேட்டுள்ளார். மேலும ஒரு ரசிகர் உங்களுக்குதான் எதுவுமே தெரியாது ஆனா ஊருக்கே தெரியும் உண்மை என்னானு என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் நீங்க இந்த காலத்துல உண்மையை சொல்ல பொறது இல்ல என்பது போலவே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
பாக்கியலட்சுமி
இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் செழியன் மாதிரியான ஆட்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அடடடா பாக்யாவுக்கு மருமகள் மேல எவ்ளே அக்கறை என்று என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த குடும்பத்துல பாக்யா மட்டும் தான் நல்லவங்களா மத்த எல்லாருமே சுயநலமாதான் இருக்கிறாங்களா என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் செழியன் கதாப்பாத்திரத்தை விமர்சித்தே கருத்தக்களை பதிவிட்டுள்ளனர்.
ரோஜா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் செண்பகம் பொண்ணு ரோஜானு நிரூபிக்கிறீங்களோ இல்லையோ ஆனா அந்த பிரியா தான் என் பொண்ணுனு செண்பகம் சொல்லாமல் இருந்தால் சரி தான் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பரபரப்பான புதிய திருப்பம் திருப்பம்னு சொல்லுவாங்க ஆனா ஒண்ணுமே இருக்காது நம்ம தான் நம்மள திருப்பிகணும் என கூறியுள்ளார். எத்தன மணி நேரோ ஸ்பெஷல் போட்டாலு இந்த நாடகத்தோட உண்மை மட்டும் தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் உண்மை தெரிய வாய்ப்பில்லை என்றே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். கண்ணம்மாவுக்கு ஹேமா பற்றிய உண்மை தெரிய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பதே இதற்கு முக்கிய காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.