New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/Tamil-Serials-9.jpg)
Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது
Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.
சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் பாவம் கண்ணன் எம்.மகன் வடிவேலு மாதிரி ஆகிட்டான் என்று கூறியுள்ளனர். நாடகம் தான் தெரியும் இருந்தாலும் கஷ்டமா இருக்கு என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். கண்ணன் பண்ணது தப்பு தான். ஆனாலும் அம்மா முகத்த கடைசியா பாக்க முடியாதது பெரிய தண்டனை. பாவம் கண்ணன். என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். என்னங்க உண்மையிலேயே சடங்கு பன்றிங்க பாவம் அந்த அம்மா என ஒரு ரசிகரும், அடுத்து தனத்துக்கு பொம்பள பிள்ளை பொறக்கும் அதுக்கு லட்சுமி அம்மா பேரு வைப்பிங்க அதானே என மற்றொரு ரசிகரும் கூறியுள்ளனர்.
பாரதி கண்ணம்மா
இந்த பரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் இந்த சீரியலை பாக்கறத நிறுத்தி 3 நாள் ஆச்சு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த ப்ரமோ ரொம்ப கடுப்பாகுது என்று பதிவிட்டுள்ளார். சரியான லூசு நாடகம் இப்படியே போன டிஆர்பி குறையும் கண்டிப்பா என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கண்ணம்மாவை கொஞ்சம் போல்டா காமிங்க என்று கூறியுள்ளார்.
பாக்கியலட்சுமி
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் நீயெல்லாம் எதுக்குடா கல்யாணம் பண்ண என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ஏன் சீரியலை இப்படி இழுவையாக கொண்டு போறீங்க எல்லா சீரியலும் இப்படித்தான் இருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பரபரப்பா போன சீரியலை இப்படி மொக்கையா ஆக்கீட்டீங்களே என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் செழியனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ராஜா ராணி 2
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் பெரிய விபத்துபா என்று பதிவிட்டுள்ளனர். மற்றொரு ரசிகர் எங்கேயும் எப்போதும் சீன உள்ள துணிச்சிட்டிங்களாடா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த ஒரு விபத்து போதுமே 2 வாரத்துக்கு ஓட்டுவீங்களே என்று கூறியுள்ளார்.
ரோஜா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அர்ஜூனும் செண்பகமும் அனு ஆட்டத்திற்க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் காத்திருந்தோம் காத்திருப்போம் நாளை வரை செண்பகம் அரவணைப்பில் ரோஜா என பதிவிட்டுள்ளார். செண்பகம் வந்து ரோஜா தான் என் மகள் என்று சென்றாலும் அண்ணப்பூரணியும் மாணிக்கமும் நம்ப மாட்டார்கள் என மற்றொரு ரசிகர் கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் யாரும் புரோமோவே மட்டும் நம்பிடாதிங்க நாளை எபிசோட் வரை வெயிட் பன்னுங்க மக்களே என கூறியுள்ளார்.
இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது ரோஜா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். செண்பகம் ரோஜாவை தாங்கி பிடிக்கும் அந்த சீனுக்காகவே ரசிகார்கள் காத்திருக்கின்றனர். மற்றடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.