scorecardresearch

Tamil Serial Rating : எவ்வளவு நாள் இந்த ஸ்டோரி போனாலும் ரோஜா தான் மகள்… அதை சீக்கிரமாக சொல்லுங்கபா…

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

Tamil Serial Rating : எவ்வளவு நாள் இந்த ஸ்டோரி போனாலும் ரோஜா தான் மகள்… அதை சீக்கிரமாக சொல்லுங்கபா…

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணன் கேட்டதும் சரிதான், தனம் சொன்னதும் சரிதான் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் எல்லாம் நல்லா நடிக்கிறீங்க… ஆனா இந்த தனம் கேரக்டர் எங்க ஆளையே காணோம் என்று கேட்டுள்ளார்.  தயவுசெய்து கண்ணாக்கு ஜோடி மாத்துங்க ப்ளீஸ் இவ நல்லாவே இல்ல அவனுக்கு செட் ஆகல என மற்றொரு ரசிகர் கூறியுள்ளார். கண்ணா நீ உன்ன மட்டும் தான் இப்போவும் யோசிக்கற உனக்காக குழந்தையே பெத்துக்காம இத்தனை வருஷம் கழிச்சு பெத்துக்காரங்களே மூர்த்தி தனம் அவங்கள பத்தி யோசிச்சு நீ காதலை தியாகம் பண்ணா குறைஞ்சா போயிருப்ப என ஒரு ரசிகர் கேட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன பாரதி சட்டுனு திருந்திட்டாரு என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இதற்குதான் இவ்வளவு நாளா வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சூப்பர் சீன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த சீன் எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருப்பதாகவும் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர். ஆனால் ஒரு ரசிகர் இந்த சீன் நல்லாதான் இருக்கு பட் இரு வெண்பா கனவா இருக்குமோ என்று பதிவிட்டுள்ளார்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சுரேஷ் பணத்தை டிரான்ஸ்பர் பண்ணுங்க கம்பெனி திவால் ஆகட்டும் என்று கூறியுள்ளார். தலைவன் ராதிகாவுக்கு பணம் கொடுக்க முடிவு பண்ணிட்டாரு என்று மற்றொரு ரசிகர் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த பிரச்சினையில பாக்யாவுக்கு திட்டு விழபோகுது என்று கூறியுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பக்கத்துல தான் இருக்காங்க ஏதோ பக்கத்து ஊர்ல இருக்க மாதிரி சொல்றீங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் திரும்பி பாக்காமலே சொல்றிங்க : அதுவா கண்ணாடி ல பாத்தங்க ……என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சந்தியா ஓவர் ஆக்டீங் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆக்டீங் என்று கூறியுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் செண்பகத்துக்கு பழைய நினைவுகள் திரும்பி ரோஜாவுடன் சேர்ந்து இருப்பதை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ஜுன் சார் அனு உக்காந்து இருந்த செரில் பசை போட்டது சூப்பர் என கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் செண்பகத்துக்கு பழைய நினைவுகள் நியாபகம் வரதுக்கு இன்னும் 2000 எபிசோட் ஆகி விடும் என கூறியுள்ளார். எவ்வளவு நாள் இந்த ஸ்டோரி போனாலும் ரோஜா தான் மகள். அதை சீக்கிரமாக சொல்லுங்க பா என கூறியுள்ளார்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். பாரதி திருந்திய மாதிரி பேசுவதே அதற்கு முக்கிய காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial rating update with promo video