Tamil Serial Rating : இந்த சீரிலுக்கு க்ளைமேக்ஸ் வேண்டாம்… தயவுசெய்து இப்பவே ஸ்டாப் பண்ணிடுங்க…

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணன் தப்ப உணர்ந்துவிட்டான் இனிமேலாவது அவனை வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க  என்று கூறியுள்ளார்.  மற்றொரு ரசிகர் நீங்க யாருமே அம்மாக்காக மொட்டை அடிக்கல ஆனா கண்ணன் மொட்டை அடிச்சிருக்கான் இப்பவாது புரிஞ்சிக்கோங்க என்று கூறியுள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும்  கண்ணனின் நடிப்பு குறித்து பாராட்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாரதிக்கு பைத்தியம் முத்திப்போச்சு என்று கூறியள்ளார். மற்றொரு ரசிகர் இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாரதியை பைத்தியம் என்றே பதிவிட்டுள்ளனர். அதில் ஒரு ரசிகர் இந்த நாடகம் பெயர் பாரதி கண்ணம்மா இல்ல ஜவ்வு மிட்டாய் என கூறியுள்ளார். இந்த சீரிலுக்கு க்ளைமேக்ஸ் எல்லாம் வேண்டாம்…நாங்க அதெல்லாம் கேக்கல… தயவுசெய்து இப்பவே ஸ்டாப் பண்ணிடுங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இவர் டாக்டர் பாரதி இல்லை சைகோ பாரதி என்று கூறியுள்ளார்.

பாக்யலட்சுமி

வீட்ல எப்போதான் திட்டு இல்ல.. எல்லா நாளும் திட்டு மழைதான் என ஒரு ரசிகர் கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் எல்லா பிரச்சனைக்கும் காரணம் பாக்யா தான் என்று அந்த குடும்பத்தில் இருக்கும் எல்லாருக்கும் நினைப்பு என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் நீங்க எடுத்து சமையல் பண்ணுங்க நல்லாதான் பண்ணுவீங்க ஏன்னா நீங்கதானே சீரியல் நாயகி என ஒரு ரசிகர் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சீரியல ஒவ்வொருத்தரும் ஒரு ட்ராக்ல போறாங்க என்றே பதிவிட்டுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ரொம்ப நாளைக்கு அப்புறம் மகிழ்ச்சியான சீன் போட்டு இருக்காங்க பரவாயில்லை நல்லாருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இப்போ நல்லாதான் இருக்கும் அடுத்த ரெண்டு நாள்ல பெரிய பிரச்சனை வெடிக்கும் பாருங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் நல்ல சீன் என்றும், அடுத்து என்ன பூகங்கம் வரப்போகுதோ என்றும் கூறியுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் செண்பகம் ரோஜாவும் சந்தோஷம் மாக இருப்பதை பார்த்து பொறாமை படும் அனு என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் பூஜா நாளைய எபிசேட்டுக்கு வருவதை பார்க்க ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் ரோஜா செண்பகம் இருவரும் இணைந்தது குறித்து மகிழ்ச்சியையே பதிவிட்டுள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். கண்ணன் தன் தவறை உணர்ந்த்தால், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அவனை ஏற்றுக்கொள்ளுமே என்ற கேள்வியே இதற்கு முக்கிய காரணம். மற்றடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial rating update with promo video

Next Story
பிக்பாஸ்-க்கு செல்கிறாரா பாக்யலட்சுமி சீரியல் நடிகை : வைரலாகும் வீடியோ பதிவு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com