Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.
சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.
ரோஜா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த கண்டன்ட் இந்த ஜென்மத்தில் முடியுமா அப்படின்னு எங்களுக்கும் சந்தேகமாக தான் இருக்கிறது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் செண்பகத்துக்கு பழைய நினைவுகள் திரும்பி ரோஜாவுடன் சேர்ந்து இருப்பதை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த ஜென்மத்தில் இந்த சீரியலில் உண்மை தெரிவது போல் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
பாக்யலட்சுமி
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மாமியாரும் மருமகளும் ஒன்னு நெர போறாங்களா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் வீட்லதான் சப்போர்ட் இல்ல வெளிலயாவது சப்போர்ட் கிடைக்கட்டும் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இந்த சமையல் வச்சி 2 மாசத்துக்கு ஓட்டுவிங்களா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கொஞ்சம் விறுவிறுப்பாக கொண்டுபோங்களேன் சார் ஏன் இப்படி இழுவையா இழுக்குறீங்க என்று கேட்டுள்ளார்.
பாரதி கண்ணம்மா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணம்மாவுக்கு இப்பதான் கொஞ்சம் அறிவு வந்துருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பரவாயில்லையே இந்த அளவுக்கு கண்ணம்மா யோசிக்கிறாங்களே என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் வெண்பாவுக்கு முடிவு கட்டு கண்ணம்மா என்றே கூறியுள்ளனர்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மூர்த்தி ரொம்ப ஓவரா பண்றாரு என்று பதிவிட்டு்ளார். மற்றொரு ரசிகர் எல்லா உதவியும் செய்துவிட்டு இப்போ அவன் சாப்பிட பக்கத்துல உட்கார்ந்தா உனக்கு புடிக்கலயா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மூர்த்தி பண்ணனு இப்பபோ பிடிக்கவே இல்லை என்று பதிவிட்டுளளனர்.
ராஜா ராணி 2
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒரு ரைட்டு பிரச்சனை தொடங்கியாச்சி இனிமேல் அழுகாட்சிய பாருங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இனிமே சந்தியாவுக்கு மாமியாருக்கு பிரச்சனை வெடிக்குமா என்று கேட்டுளார். மேலும் ஒரு ரசிகர் அர்ச்சனாவுக்கு கண்டன்ட் கெடச்சாச்சு என்றும், இந்த பிரச்சனை 3 மாதத்திற்கு போகும் என்றும் கூறியுள்ளார்.
இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது ரோஜா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். அர்ஜூன் செண்பகம் மீது சந்தேகப்படுவது இதற்கு முக்கிய காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil