/tamil-ie/media/media_files/uploads/2021/09/Tamil-Serials-16.jpg)
Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.
சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.
பாரதி கண்ணம்மா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணம்மா சொல்வது பாரதி நம்ப மாட்டா என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாரதி மாமாவோட பேசணும் என்று சொன்னவுடன் பாரதி முகத்தில் வந்த சிரிப்பு அருமை என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இது ஒரு நெகிழ்வான தருணமாக இருக்கும் பார்க்கவே சூப்பரா இருக்கு என கூறியுள்ளார். கண்ணம்மா உடைய தாய்மை நடிப்பு சூப்பர் சூப்பர் என ஒரு ரசிகர் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த ப்ரமோ குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் குடும்பத்தில் என்ன ஒற்றுமை நல்லது என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அப்போ எல்லாருக்கும் ஒன்னா சமைக்கலயா தனித்தனியாதான் சமைச்சிங்களா என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே போய்க்கிட்டு இருப்பீங்க கதைக்கு வாங்க பாண்டியன் ஸ்டோர்ஸ் என்று கூறியுள்ளார்.
ராஜா ராணி 2
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பரவாயில்லையே இவ்வளவு நாள் சண்டை இப்போ ரொமான்சா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் நேற்று உங்க செந்தில் அர்ச்சனா படத்துக்கு போனாங்க இன்னைக்கு நீங்களா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படியோ கலகலப்பா கொண்டுபோனா நல்லாருக்கும் என்றே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
ரோஜா
இந்த பிரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பிர்யா ஆட்டம் கூடிய விரைவில் முடிய வேண்டும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இனி ரோஜா பூஜா காம்பினேஷன் சூப்பர் தான்.அனு பாவம் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் சரஸ்வதி அல்ல அது செண்பகம் தான் என்று அர்ஜுனனுக்கு தெரிய வேண்டும் என கூறியுள்ளார். அனு நல்லா ஆனவுடன் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்ன கோர்ட் உத்தரவு என்ன ஆச்சு? என ஒரு ரசிகர் கேட்டுள்ளார்.
இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலம். பாரதியும் கண்ணம்மாவும் மனசு விட்டு பேசும் நிகழ்விற்கான அனைவரும் காத்திருக்கின்றனர். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்தை ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.