Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.
சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் வழக்கமான சீரியல் பார்மெட்டுக்கு வந்தாச்சு இனிமே குடும்பம் ரெண்டா உடைய போகுது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் நல்லா இருக்க குடும்பத்துல இப்படி ஒரு ஆள் குழப்பத்தை உண்டுபன்னால்தான் சீரியலுக்கு அழகு என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வழக்கமான சீரியல்தான் ஒன்னும் ஸ்பெஷல் இல்லை என்றே பதிவிட்டுள்ளனர்.
பாரதி கண்ணம்மா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்னதான் வெண்பாவே வந்து உண்மையை சொன்னாலும் பாரதி கேட்கமாட்டான் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஹேமாதான் கண்ணம்மா பொண்ணுனு தெரிஞ்சா பாரதி என்ன பண்ணுவான் அவன் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இப்படியே எத்தனை எபிசோடுதான் ஓட்டூவீங்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாரதிக்கு பைத்தியம் என்றே கூறியுள்ளனர்.
பாக்யலட்சுமி
இப்பவும் கோபிக்கு ஆதரவாதான் டைரக்டர் கதையை கொண்டு போகிறார் வெரி வொர்ஸ்ட் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இனிமே குடும்பத்தில் உள்ள அனைவரும் பாக்யாவை மட்டம் தட்ட சரியான வழி காமிச்சிரிருக்கார் டைரக்டர் என்று கூறியுள்ளார். மேலும ஒரு ரசிகர் ஒரு பொண்ணு முன்னேறுவது டைரக்டருக்கே பொறுக்கல போல என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாக்யா பாவம் என்றே பதிவிட்டுள்ளனர்.
ராஜா ராணி 2
இந்த சீரியல் ப்ரமோவே இப்படி இருக்கு என்று கடுமையாக விமர்சித்துள்ளார் ஒரு ரசிகர். மற்றொரு ரசிகர் இந்த சீரியல் எதுக்கு இப்படி வச்சிட்டு இருக்கீங்க சீக்கிரமா முடிச்சிட்டு போகவேண்டிதான என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படியே போனா ரொம்ப வொர்ஸ்ட் சீரியல் அது ராஜா ராணி 2 தான் என சொல்லிவிடும் நிலை வரும் என்று கூறியுள்ளனர். மேலும் ரசிகர்கள்பலரும் கடுமையான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர்.
இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். ஹேமா யார் என்பதை சௌந்தர்யா சொல்லிவிடுவதே இதற்கு முக்கிய காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என் கூறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil