Advertisment

Tamil Serial Rating : உலகத்துலயே புடவைக்கு மேட்ச்சா நெய்ல் பாலிஷ் போடற சமையல் அம்மா நம்ம கண்ணம்மா தான்...

Tamil Serial News : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : உலகத்துலயே புடவைக்கு மேட்ச்சா நெய்ல் பாலிஷ் போடற சமையல் அம்மா நம்ம கண்ணம்மா தான்...

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கஸ்தூரி வில்லத்தனம் அதிகமா இருக்கே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் தெருவுக்கே கேட்கிற மாதிரி நல்லா கத்தி சொல்லு கண்ணா அப்போதான தெரியும் என்று கூறியுள்ளார். மற்றொரு கஸ்தூரி டபுள் கேம் சீக்கிரமா கண்டுபிடிங்க பாண்டியன் ஸ்டோர்ஸ் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் என்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் வழக்கமான சீரியல் மோட்-க்கு வந்துடுச்சி என்று கேட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சீக்கிரம் அந்த டெஸ்ட் எடுங்க பா அதான் பாதி உண்மை தெரிஞ்சு போய்டுச்சு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த சீன் கண்டிப்பா வெள்ளிகிழமை தான் வரும்.. இவன் இப்டி நம்மள காமிச்சு ஏமாற்றி கிட்டு இருக்கான்.. என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் உலகத்துலயே புடவைக்கு மேட்ச்சா நெய்ல் பாலிஷ் போடற சமையல் அம்மா நம்ம கண்ணம்மா தான் என கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாரதியை டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க சொல்லியே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கோபி மாட்டிக்கொள்ளும் தருணத்தை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். இப்படி ஒரு மகன் கிடைப்பது வரம் விஷால் நடிப்பு ரசிக்க வைக்கிறது யதார்த்த நடிப்பு அனைவரிடமும் வாழ்த்துக்கள் என ஒரு ரசிகர் கூறியுள்ளர். மற்றொருவர், அம்மா எப்படி இருந்தாலும் நம்மலும் எழில் மாதிரி ஒரு பையனாக வாழ ஆசையை ஏற்படுத்துகிறது இந்த கதை என கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இப்போது கோபி பாகியாவை வெளிய அனுப்புன காட்சி பாத்து கோபத்தில் எழில் கோபி செய்யும் வேளையை பாக்யாவிடம் சொன்னா சூப்பரா இருக்கும் என கூறியுள்ளார்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பார்வதிக்கு அடுத்த பிரச்சனை ஸ்டார்ட் ஆகிடுச்சி என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் வழக்கம்போல இந்த இதற்கு காரணம் சந்தியா தான் என்று சிவகாமிக்கு ஒரு காரணம் கிடைச்சாச்சு என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இந்த பிரச்சனை சீக்கிரம் முடிங்க என்று கூறியுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இப்போ அர்ஜூன் ரோஜா ரொமான்ஸ் இல்ல ஒரு காமெடி இல்லை என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பரபரப்பான திருப்பம்னு சொல்லிட்டு ஒன்னுமே இன்ட்ரஸ்டிங்கா இல்லை என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இப்படியே போன இன்னும் எவ்வளவு நாள்தான் ஓட்டூவீங்க சீக்கிரமா உண்மையை சொல்லுங்க என்று கூறியுள்ளார்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்ககும்போது பாக்கியலட்சுமி சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். பாக்யலட்சுமியை வீட்டை விட்டு வெளியில் துரத்துவதே இதற்கு முக்கிய காரணம். மற்றடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.  

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment