Advertisment

Tamil Serial Rating : முதலில் பாட்டியை விரட்டினால் தான் கதை பார்க்க நன்றாக இருக்கும்... ரோஜாவின் நிலைமை...

Tamil Serial News : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : முதலில் பாட்டியை விரட்டினால் தான் கதை பார்க்க நன்றாக இருக்கும்... ரோஜாவின் நிலைமை...

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் தனம் ஓவர் ஆக்டிங் கம்மி பண்ணுங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் தனம் ஓவர் ஆக்டிங்க குறைத்தால் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் உருப்படும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இதுக்கு எதுக்கு அவன் பக்கத்து வீட்ல இருக்கனும் கூட்டிக்கிட்டு வந்து வீட்லயே வச்சிக்கலாம்ல என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கஸ்தூரி ப்ளான் வொர்க்அவுட் ஆகிறது என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யா அவ்ளோ பேச்சு பேசுனா அதெல்லாம் ஞாபகம் இல்லையோ என்று கேட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணம்மா சரியாதா கேக்குராங்க சௌந்தர்யா பதில் சொல்லுங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கண்ணம்மாவுக்கு உண்மை தெரிய 8 வருஷம் பாரதிக்கு உண்மை தெரிய இன்னும் 8 வருஷம் ஆகுமா என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் கண்ணம்மா ஏன் ஹேமாகிட்ட உண்மையை சொல்லவில்லை டைரக்டர் சார் என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படியே ஒவ்வொருவருக்கும் உண்மை தெரிய பல வருடங்கள் ஆகும் அதுவரைக்கும் பொறுமை முக்கியம் என்று கூறியுள்ளானர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாக்கியா மனசு கோபி க்கு வாராது உண்மை தெரிந்தால் உடைந்து விடும் கோபி யை நம்பும் அற்ப மனம் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ப்ரோமோ பார்த்து யாரும் ஏமாற வேண்டாம்... இப்படியும் கோபி திருந்தபோவதில்லை என கூறயுள்ளார். மற்றொரு ரசிகர் இது தான் பாக்கியாவின் நல்ல குணம்..... என கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாக்யாவுக்கு பாராட்டும் கோபிக்கு விமர்சனத்தையும் பதிவிட்டுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சிவகாமிக்கு சான்ஸ் கெடச்சாச்சு சந்தியாவின் நிலைமை என்ன என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படியே ஒரு ஒரு பிரச்சனை உண்டாக்குங்க சீரியல் ரொம்ப நல்லாருக்கும் என்றுகூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் சந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை ஸ்டாட்டிங்கா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படியே போன என்ன அர்த்தம் இதுக்கு முடிவே இல்லையா என்று கேட்டுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் வடிவுக்கரசி அவர்கள் எவ்வளவு பெரிய நடிகை. இந்த மாதிரி கேவலமான பாட்டி கேரக்டரில் நடிப்பது சரியாகப்படவில்லை என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த அண்ணப்பூரணிக்கு அறிவே கிடையாது . இது நல்ல அம்மாவே கிடையாது அப்புறம் எப்படி ஒரு பாட்டியா இருக்கமுடியும் என கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் முதலில் பாட்டியை இந்த வீட்டை விட்டு விரட்டினால் தான் கதை பார்க்க நன்றாக இருக்கும் எனகூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் செண்பகத்திற்கு உண்மை தெரிந்துவிட்டது என்றே கூறியுள்ளார்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது ரோஜா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். செண்பகம் ரோஜா தான் தனது பொண்ணாக இருக்க முடியும் என்று கூறியுள்ளதே இதற்கு முக்கிய காரணம் மற்றடி அனைத்து சீரியல்களும் அநதந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என கூறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment