Tamil Serial Rating : இதற்குதான் கண்ணனை எதிர்விட்டில் குடி வைத்தாரா டைரக்டர்?… உடைந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் ரகசியம்

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர், இந்த தருணம் எந்த பெண்களாலும் மறக்க முடியாத தருணம்…என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த சீனுக்காகத்தான் கண்ணனை எதிர்விட்டில் குடி வைத்துள்ளார் டைரக்டர் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இனிமேல் கண்ணனை வீட்டில் சேர்த்துக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார். எப்போதுமே வீட்ல இருக்ர இந்த முல்ல,மீனா எங்க போணாங்க பாவம் தனம் என ஒருவர் கேட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எல்லாம் உண்மையும் கண்ணம்மா பாரதிக்கு தெரிய இன்னும் ஒரு வருசம் ஆகும் போல ஆனாலும் நல்லாதான் இருக்கு..! என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த சீனுக்காகத்தான் இவ்வளவு நாள் காத்திருந்தேன் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் வெண்பா பல்பு வாங்குறத பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கண்ணம்மாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன கோபி ராதிகாகிட்ட எப்படி பணம் கேக்குறதுனு பாக்குறீங்களா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் வீட்டு செலுக்கு பணம் கொடுக்க முடியல ஆனா ராதிகாவுக்கு பணம் கொடுக்க பாடுபடுறீங்களாக கோபி என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இனியாவுக்கு ஸ்கூல் பீஸ் பாக்யா கட்டுவாங்க என்று கூறியுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்னடா வீட்ல எல்லாருமே  சதி பண்றீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் சீரியல் இப்படியேதான் போகுமா இல்ல எல்லாரையும் க்ளைமேக்ஸ்ல தான் ஒன்னு சேர்ப்பீங்களா டைரக்டர் சார் என்று கேட்டுள்ளார். ஏன் ஒரு வீட்டுக்குள்ள இருந்துட்டு இப்படி பண்ணீற்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் வீட்டுக்குள்ள சண்டை உண்ணடாகிறதே உங்களாலதான் என்று கூறியுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ரோஜா அக்கா தான் செண்பகம் அம்மா மகள் என்று தெரிய வரும்போது இந்த பாட்டி அப்போ என்ன பண்னும் என கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த அண்ணப்பூரணிக்குசெண்பகம் மேல உள்ள பாசத்துல பாதி கூட யசொதா மேல இல்ல, ஏன் ஒரு தலை பாசம் என கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ரோஜா தான் செண்பகம் பொண்ணு என்று தெரிய இன்னும் 500 எபிசேட்டு மேல் ஆனாலும் ஆகலாம் என கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படியே பண்ணிக்கிட்டு இருங்க உண்மைய மட்டும் சொல்லிடாதீங்க என்று கூறியுள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். ஹேமா தன் குழந்தைதான் என்று தெரிந்துகொண்ட கண்ணம்மா அடுத்து என்ன செய்யபோகிறார் என்பதே இதற்கு முக்கிய காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial rating update with promo video

Next Story
Bigg Boss Tamil: ‘எனக்கு வாழ்க்கையை காட்டியதே யாஷிகாதான்!’ உண்மையை உடைத்த நிரூப்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com