Advertisment

Tamil Serial Rating : டைரக்டருக்கும் பாரதிக்கும் சுத்தியலால் இரண்டு தட்டு தட்டினால் சரியா இருக்கும்... பாரதி கண்ணம்மாவுக்கு இந்த நிலையா?

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating :  டைரக்டருக்கும் பாரதிக்கும் சுத்தியலால் இரண்டு தட்டு தட்டினால் சரியா இருக்கும்... பாரதி கண்ணம்மாவுக்கு இந்த நிலையா?

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்ஒருவர் அடுத்து தனம் குழந்தை பெயர் சூட்டும் விழா என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் யார் பெற்ற மகனோ அவர் பாண்டியன் ஸ்டொர் சீரியல்கு வரவேற்கிறோம் குட்டி பாண்டியன் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் வெல்கம் ஜூனியர் மூர்த்தி குழந்தை கள் மட்டுமே இந்த உலகை அழகாக்கும் வண்ணங்கள் என கூறியுள்ளார். எப்படியும் குழந்தை பெய்ர்வைக்கும் நாள், ஃபர்ஸ்ட் பிறந்த நாள் கேக் கட்டிங் அப்பிடியே இன்னும் ஒரு ரெண்டு வருஷம் பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜியம் தான் என கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் குழந்தைக்கு வாழ்த்து சொல்லியே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் டைரக்டருக்கும் பாரதிக்கும் சுத்தியலால் மண்டேலா இரண்டு தட்டு தட்டினால் சரியா இருக்கும்.. என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சௌந்தர்யாக்கு எங்கட்டு போனாலும் ஆப்பு இருந்துகிட்டே இருக்கு என்டா சோதனை இது என்று கூறியுள்ளார். மேலும ஒரு ரசிகர் எப்டியோ கண்ணம்மா உண்மைய சொல்லபோறதில்ல....அப்படியே கண்ணம்மா உண்மையே சொன்னாலும், ஹேமா அத சீரியஸா எடுத்துக்க போறது இல்ல....அப்றம் ஏன் இந்த வித்தையெல்லாம்?..... என ஒரு ரசிகர் கேட்டுள்ளார். கன்னிதீவு ஒரு தொடர்கதை தினசரி பேப்பர்ல வரும் அதைவிட பெரிய கதை கண்ணம்மா கதைகளம்..! என கூறியுள்ளார்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கோபி இப்போவாது மாட்டுவாரா இல்ல தப்பிச்சிடுவாரா என்று கேட்டுள்ளார். வீட்ல எவ்ளோ பிரச்சனை நடந்தாலும் கோபிக்கு ராதிகாதான்  ரொம்ப முக்கியம் போல... ராதிகாகிட்ட மாட்டிக்க கூடாதுனு என்னலாம ப்ளான் பண்றாரு பாருங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கோபியை விமர்சித்தே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அர்ச்சனா உனக்கு வாய் கொஞ்சம் இல்ல அதிகமாவே நீளம் தான் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சொந்த வீட்டுக்குள்ளே இப்படி பண்றீயே என கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அர்ச்சனாவுக்கு எப்போ ஆப்பு வைப்பீங்க டைரக்டர் சார் என்று கேட்டுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் உண்மை கண்டிப்பா ஜெயிக்கும்  பொய்யை உடைக்க ரோஜாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் ரோஜா பாட்டி & மாணிக்கத்தை அவ்வளவு எளிதில் மன்னிக்கக்கூடாது என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சரியா சொன்னீங்க!! ஒரு நாள்தான் உண்மை ஜெயிக்கும். மத்த எல்லா நாளும் பொய் தான் ஜெயிக்கும்.அப்படித்தானே டைரக்டர் சார் . ஸ்கிரிப்ட் ரைட்டர் சார் யாராவது இருக்கீங்களா  என கூறியுள்ளார்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக ஏதிர்பார்பு உள்ளது என்று கூறலாம் ஹேமாவை கண்ணம்மா கூப்பிட வருவதே இதற்கு முக்கிய காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment