Tamil Serial Rating : இனி வெண்பா ஆட்டம் க்ளோஸ்… சீரியல் டாப்… பரபரப்பாகும் பாரதி கண்ணம்மா

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் நல்லா இருந்த குடும்பத்துல பிரச்சனை வெடிக்குதா என்று கேட்டு்ள்ளார். மற்றொரு ரசிகர் இப்படியே குடும்த்தில் பிரச்சனையை உண்டாக்கி பிரிச்சிடுங்க என்று கூறியுள்ளார். மேலும் ஒருவர் நல்லா இருந்த ஒரு சீரியலையும் இப்படி சண்டை போட்டு வழக்கமான சீரயலா மாத்திட்டீங்களே ரைக்டர் சார் என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இப்போ கலவர பூமியா மாறிக்கிட்டு இருக்கு என்று கூறியுள்ளனர். மேலும் மீனா அக்கா பாவம் என்றும் பலர் கூறியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன பாரதி கண்ணம்மா சீரியல்ல ஒவ்வொரு ட்விட்ஸ்டா வெளிய வருது க்ளைமேக்ஸ்ச நெருங்குதா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் வெண்பாவுக்கு அடுத்த ஆப்பு ரெடியா இருக்கு போல என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இனி வெண்பா ஆட்டம் க்ளோஸ் சீரியல் டாப் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அப்படியே அந்த டிஎன்ஏ மேட்டரையும் காதுல போட்டுக்கோங்க கண்ணம்மா என்று கூறியுள்ளார். இதில் ஒரு ரசிகர் இப்போதான் ஆட்டம சூடு பிடிக்குது அடுத்து என்ன நடக்க போகுதோ என்று கூறியுள்ளார்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் உடனே கோபி அப்பாவுக்கு ஸ்டோக் வந்து வாய் பேச முடியாது இல்லைனா சுய நினைவு போய் விடும் திரும்ப நினைவு வருவதற்கு 3 வருஷம் ஆகும் பாவம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இதெல்லாம் நிறைய பாத்தாச்சி. நடக்கும்போது பாக்கலாம். கணவுண்ணு சொல்லி காது குத்தவஉம் வாய்ப்பு இருக்கும். என் கூறியுள்ளார். இதை பார்த்து யாரும் ஒன்றும் செய்யப்போவதில்லை. உடனே கோபி நல்லா பாத்தீங்களா அது நான்தான என்று கேட்டுவிட்டு தப்பித்துக்கொள்வார் என்று கூறியுள்ளார். மேலும ரசிகர்கள் பலரும் கோபி இப்பவாது வீட்டில மாட்டிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ரோஜா பண்ண நல்ல செயல் தான் செண்பகத்துக்கு சந்தோசமா இருக்க போகுது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் எப்படியும் ரோஜா அக்கா தான் ஜெய்க்க போறாங்க என கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இன்னும் எத்தனை காலம் தான் அனு செண்பகம் ரோஜா என்று இழுத்துக்கொண்டு செல்வார்கள் என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ரோஜா ஜெயிக்கிறது இருக்கட்டும் மதர்ஸ் டே கொண்டாடுறேன் சொல்லி கதை ஏன்டா இழுக்கிறிங்க என கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கதையை இழுக்காதீங்க டைரக்டர் சார் என்றே கூறியுள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். வெண்பாவின் ரகசியம் குறித்து அஞ்சலி தெரி்ந்துகொண்டதே இதற்கு முக்கிய காரணம் மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்தி்ப்படுத்தும் என்று கூறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial rating update with promo video

Next Story
இது வெடிக்கிற திரியா ..? டிரைலர் எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com