Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.
சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.
பாரதி கண்ணம்மா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த நாடகம் முடியும் முடியும்னு எதிர் பார்ப்பது நமது தவறு தான் , அவிங்க முடிக்க மாட்டாங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மற்றொரு ரசிகர் கண்ணம்மா வெணபாவை வச்சி செய்றாங்களே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாரதி வேணுனே போன வச்சிட்டு போய்டாரோ என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் பாரதி வீட்ல கண்ணம்மா எப்படி வந்தாங்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கண்ணம்மாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பாக்யலட்சுமி
இந்த ப்ராமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கோபிக்கு பயம் வந்துடுச்சி என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அடுத்து என்ன நடக்கும் என்று கோபியின் பயம் சூப்பர் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்று சும்மாவா சொன்னாங்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கோபியின் அப்பாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த குழந்தைகளை வைத்து இன்னொரு பிரச்சனையை ஸ்டார்ட்பண்ண போறீங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இவ்வளவு நாள் நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு ஏன் இப்படி பிரச்சனையை கிளப்பூறீங்க என்று கேட்டுள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் மீனா ஏற்கனவே கோபமா இருக்காங்க இப்போ இந்த விஷயம் பெருசா வெடிக்க போகுது என்ன ஆகபோகுதோ என்று கூறியுள்ளனர்.
ரோஜா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்னது செண்பகம் வீட்டை விட்டு வெளியேற போகிறாள்ள…. செம்ம டிவிஸ்ட் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் செண்பகம் அம்மா என்ன திடீர்னு வீட்டை விட்டு போரேனு சொன்ராங்க என்று கூறியுள்ளார். மேலும ஒரு ரசிகர் எதுக்காக இப்படி இழுவையா இழுத்துக்கிட்டு இருக்கீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த டைகர் மாணிக்கம்எங்க போய்ட்டாரு ஆளையே காணோம் என்று கேட்டுள்ளார். மேலும ரசிகர்கள் பலரும் சீரியலை முடிங்க என்றே கூறியுள்ளனர்.
இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாக்யலட்சுமி சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். கோபி வீட்டில் மாட்டிக்கொண்டதே இதற்கு முக்கிய காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil