Tamil Serial Roja Rating : சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று ரோஜா. ப்ரைம் டைமில் ஒளிரபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் . அதற்கு ஏற்றாற்போல் இந்த சீரியலின் தினசரி எபிசோடுகள் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தி வருகிறது. சொத்தை அபகரிக்கவும், கொலை வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்வும், வில்லி பிரியா அனு என்ற பெயரில் அன்னப்பூரணி வீட்டில் பேத்தி என்று சொல்லி உள்ளே நுழைகிறார்.
ஆனால் உண்மையாக பேத்தியான ரோஜாவை திருமணம் செய்துகொள்ளும் அன்னப்பூரணியில் பேரன் அர்ஜூன் பிரியா அனு இல்லை என்பதை நிரூப்பிக்க எடுக்கும் முயற்சிகளே இந்த சீரியலின் கதை. தற்போது 1000எபிசோடுகளை கடந்துள்ள இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும், ஏற்கனவே ஒளிபரப்பான காட்சி அமைப்புகள் போன்று மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாவதால் ரசிகர்களுக்கு கொஞ்சம் சலிப்பை தட்டுகிறது.
அதுமட்டுமல்லாமல் சினிமாவில் வில்லன் செய்யும் சூழ்ச்சியில் சிக்கும் நாயகன் அதை இடைவேளையில் கண்டுபிடித்து அதன்பிறகு பழிவாங்குவது போல் கதைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சீரியலில் அப்படி இல்லை. ஒரு சீரியல் 1000 எபிசோடுகள் கடந்தாலும், கடைசி எபிசோட்டில் தான் நாயகன் வெற்றி பெறுவார். அதுவரை நாயகன் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியின் தான் முடியும். குறிப்பாக இந்த கருத்து சன்டிவி சீரியலுக்கு முக்கியமாக பொருந்தும்.
அந்த வகையில் சன்டியின் ரோஜா சீரியலில் நாயகன் அர்ஜூன் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியின் தான் முடிந்துள்ளது. அதிலும் வில்லி பிரியாவின் சூழ்ச்சியில் சிக்கி பலமுறை சிறைக்கும் மருத்துவமனைக்கும் அர்ஜூன் ரோஜா அலைந்துகொண்டிருப்பதை பல எபிசோடுகளில் பார்த்திருப்போம். ஆனாலும் ரசிகர்களின் கருத்தை எடுத்துக்கொள்ளாத இந்த சீரியலின் இயக்குநர் வைத்த காட்சிகளையே மீண்டும் மீண்டும் அரங்கேற்றி வருகிறார்.
ஆனாலும் ரோஜா சீரியலில் எந்த காட்சி வந்தாலும் நாங்கள் அசராமல் பார்போம் என்று சொல்லி பலரும் சீரியலுக்கு ஆதரவு அளித்து வருகினறனர். தற்போது 1000-ம் எபிசோடுகளை கடந்துள்ள இந்த சீரியலில் ரோஜாதான் உண்மையான பேத்தி என்பது எப்போது தெரிய வரும் என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஒவ்வொரு வார இறுதியிலும் வெளியாகும் ப்ரமோவில் அர்ஜூன் தான் உண்மையை வெளிப்படுத்த கடுமையாக முயற்சி செய்வதாக கூறி வருகிறார். ஆனாலும் அப்படி எதும் நடப்பதற்கான அறிகுறியே இல்லை.
இந்த நிலையில், இன்றைய எபிசோடு குறித்து ப்ரமோ தற்போது வெளியாகியுளளது. இதில் அன்னப்பூரணியின் மகள் செண்பகம் அணிந்திருக்கும் செயினில் பாம் உள்ளது. அவர் தனியாக இருக்கும் அறைக்கும் சாக்ஷி வருகிறார். இடையே நிகழ்ச்சி அரங்கில் அனுவை சோதனை செய்கிறேன் என்று கூறுகிறார். இதனால் இந்த முறையும் அர்ஜூன் தோற்றுவிடுவாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது. எது எப்படியோ ரசிகர்களை திருபதிப்படுத்த இயக்குநர் புதிதாக ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும் என்பது பொதுவான ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் ரோஜாவுக்கு எதிரான பல சதிகளை செய்துள்ள அனு பலமுறை அவரை கொலை செய்யவும் முயற்சித்துள்ளார். இந்த முயற்சியின் போது அவர் செய்த செயல்கள் புதிதாக இருந்தது. வீடடின் பூஜை அறையில் உள்ள மணியில் பாம் வைத்தது, முதல் தற்போது செண்பகத்தின் செயினில் பாம் வைத்தது வரை சமூகத்திற்கு பல நல்ந ஐடியாக்களை இயக்குநர் வழங்கி வருகிறார் என்று பலரும் விமர்சித்து வருகினறனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil