scorecardresearch

Tamil Serial Update : பரவாயில்லையே கோபி முகத்தில் புன்னகை தெரியுது… பாக்யலட்சுமிக்கு யோகம்தான்…

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கதிர் எப்போமே கண்ணன விட்டுக்கொடுக்கமாட்டான் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கல்யாணத்துக்கு அப்புறமாவது கண்ணனுக்கு பொறுப்பு வரும்னு பார்த்த இப்படி இருக்கானே என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பார்ட் டைம் ஜாப் பார்த்துக்கிட்டே படி கண்ணா வீட்ல சீக்கிரமா சேர்த்துக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கதைக்குள்ள வாங்க இன்னும் எத்தனை நாளைக்குதான் இப்படியே ஓட்டிக்கிட்டு இருப்பீங்க என்று கேட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சௌநதர்யாவை திட்டி தீர்த்து வருகின்றனர். கண்ணம்மா குழந்தைதானே அவளுக்கு உண்மை தெரிந்தால் என்ன என்று பலரும் கருத்துக்களை கூறியுள்ளனர். அதில் ஒரு ரசிகர் போச்சிடா இந்த இதை பாரதி வேற பார்த்துவிட்டானா இனி வீட்ல ரணகளம்தான என்று பதிவிட்டுள்ளார்.  கண்ணம்மா குழந்தையை அவளிடமே கொடுப்பதற்கு உங்களுக்கு என்ன பிரச்சனை என்று மற்றொரு ரசிகர் கேட்டுள்ளார்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஸ்கூலுக்கு போகும் பாக்யாவை கண்டபடி திட்டிட்டு இப்போ பரிசு வாங்குன உடனே பாசமா பேசுறியே இனியா என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பரவயில்லையே கோபி முகத்தில் புன்னகை தெரியுது என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாக்யாதான் பரிசு வாங்குவாங்கனு எங்களுக்கு முன்னாடியே தெரியுமே என்று பதிவிட்டுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்குள்ள எப்போதான் சண்டை இல்லாம இருக்கும் என்று கேட்டுள்ளார்.  ஆயிரம் சீரியலை பாத்துருக்கேன் இந்த மாதிரி எப்போமே அழுகாட்சியான சீரியலை இதுவரைக்கும் பார்க்கவே இல்லை என்று மற்றொரு ரசிகர் கூறியுள்ளார். நீங்க சண்ட போட்டி இருக்கரவங்களையும் கடுப்பாக்குறீங்க என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.  இது எல்லாத்துக்கும் காரணம் சிவகாமிதான் என்று மற்றொரு ரசிகர் கூறியுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்க என்ன பண்ணாலும டைரக்டர் அனுவுக்கு சாதகமாத்தான முடிப்பாரு என்று பதிவிட்டுள்ளனர். மேலும் ஒரு ரசிகர் செண்பகம் அர்ஜூன் வீட்டுக்கு வந்தா பிரியா கதை முடிஞ்சிடும் என்று கூறியுள்ளனர். மற்றொரு ரசிகர் இந்த சீரியல் முடிஞ்சா ரொம்ப சந்தோஷம் என்று கூறியுள்ளார். அட போங்கய்யா.. நீங்களும் உங்க கதையும்..என மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் எப்படியும் செண்பகம் அம்மாவை பார்க்க போது இல்ல அப்புறம் எதுக்கு வீண் விளம்பரம் என கேட்டுள்ளார்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரிலுக்கே அதிக எதிர்ர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். ஹேமா தன்னுடைய குழந்தைதானா என்பதை தெரிந்துகொள்ள கண்ணம்மா எடுக்கும் முயற்சியே இதற்கு முக்கிய காரணம் என்று கூறலாம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial rating update with promo video in tamil