Tamil Serial Rating : யாரு வேணாலும் சாகட்டும் நாங்க மேக்கப் போட்டு தான் இருப்போம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் பரிதாபம்

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர், அஸ்வின் பூஜா வந்தது ரொம்ப தோஷம் பார்க்கும் போது எபிசோட் வெரி வெரி சூப்பர் ஜோடி என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் செண்பகத்துக்கு பழைய நினைவுகள் திரும்பி ரோஜாவுடன் சேர்ந்து இருப்பதை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் செண்பகத்திற்கு பழைய நினைவுகள் வரவேண்டும் என்றே கரத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

பாக்யலட்சுமி

இது வெறும் சீரியல் அல்ல பெண்களின் கனவு எப்படியாவது வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று அதைத் திரையில் பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது என ரசிகர் ஒருவர் கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஒரு விஷயத்தில் முன்னேறும் போது பல தடைகள் வரும் ஆனால் கடின உழைப்பு வீண் போகாது சூப்பர் பாக்கியா என்று கூறியுள்ளார். இந்த பாக்யா அம்மாவ எனக்கு ரொம்ப புடச்சிருக்கு… யார் என்ன சொன்னாலும் தன்னொட இலக்குல குறியா இருக்காங்க என்று கூறியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இதுக்கு பேசாம பருத்தி மூட்ட(கண்ணன்) குடோன்லயே இருந்திருக்கலாமே மூர்த்தி என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அம்மா செத்து ஒரு வாரம் ஆகல அதுக்குள்ள குலதெய்வ கோவிலுக்கு போறதா சீரியல் இருந்தாலும் ஞாயம் வேணுமா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் முதல்ல தனத்தோட கனவுல, அப்புறம் மூர்த்தி கனவுல.. அப்படினு இன்னும் ஒரு‌ மாசத்துக்கு லெட்சுமி அம்மா ரொம்ப பிசி என கூறியுள்ளார். யாரு வேணாலும் சாகடும் நாங்க மேக்கப் போட தா இருப்போம்… என பதிவிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எப்போதான் இந்த ட்ராக்க முடிப்பீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் வெண்பாவுக்கு பதில் சொல்லதா கண்ணம்மாவுக்கு வேலையோ? என்று கேட்டுள்ளார். போன வாரம் வெண்பா சொல்றது பொய்னு கண்ணம்மா யோசிச்சாங்க ஆனா இந்த வாரம் வெண்பாவுக்கு அடங்கி நடக்கராங்க அப்போ போனவாரம் வந்த அபூர்வ சிந்தனை இப்போ எங்க போச்சு என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும்இந்த சீரியல் ரொம்ப போர் என்று கூறியுள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாக்யலட்சுமி சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். பாக்யா தனது தொழில் வெற்றி பெறுவது இதற்கு முக்கிய காரணம். மற்றடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial rating update with promo video in tamil

Next Story
Vijay TV Serial; பாரதி மன்னிப்பு கேட்டா… வீட்டுக்குள் வருவதைப் பற்றி யோசிக்கிறேன்; கண்ணம்மா பிடிவாதம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com