Tamil Serial Rating : முல்லைக்கு ஸ்கோப் கொடுக்குறேனு சொல்லி இப்படி பண்றீங்களே டைரக்டர் சார்...

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : முல்லைக்கு ஸ்கோப் கொடுக்குறேனு சொல்லி இப்படி பண்றீங்களே டைரக்டர் சார்...

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் முல்லை இப்போ தேவையே இல்லாமல குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கட்டிட வேலை செய்யுற இடத்தில் ஓனருக்கு என்ன வேலை இருக்க போகுதுனு ஜீவா நினைத்திருப்பார் இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் முல்லை எதுக்கு தேவையில்லாம கோபப்படுற என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் முல்லைக்கு ஸ்கோப் கொடுக்குறேனு சொல்லிட்டு சண்டையை மூட்டிவிட்ட இயக்குநர் என்று கூறியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

Advertisment
Advertisements

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணம்மா கிடைக்கிற பால் எல்லாமே சிக்சர் அடிக்கிறீங்களே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஆமா நீங்க பாரதி வீட்ல என்ன பண்றீங்க என்று கேட்டுளளார். மற்றொரு ரசிகர் பாரதி ரியாக்ஷன் ஏன் இப்படி இருக்கு என்று கேட்டுள்ளார். மேலும் ரசகர்கள் பலரும் சீரியலை இப்படியே கொண்டு போங்க அப்போதான் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் என்று கூறியுள்ளனா.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எவ்வளவு சீரியஸான காட்சியா இருந்தாலும் கோபி இருந்தா அது காமெடிதான் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் தப்பு பண்ணி மாட்டிக்கிட்ட இப்படித்தான் இருக்கும் கோபி சார் அனுபவீங்க என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் கவலைப்படாதீங்க இந்த விஷயம் பாக்யாவுக்கு தெரிய இன்னும் ஆயிரக்காணக்கான எபிசோடு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கோபியின் காமெடி சூப்பர் என்றே கூறியுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அடுத்த பிரச்சனைக்கு ரெடியாகியாச்சு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ச்சனாவுக்கு வேற வேலையே இல்லையா இதெல்லாம் யாருமே கேட்க மாட்டாங்ளா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படியே போனா என்ன அர்த்தம் சட்டு புட்டுனு எதாவது ஒரு முடிவுக்கு வாங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பிரச்சனை இல்லாத நாளே இல்லை ராஜா ராணி 2 சீரியல்

ரோஜா

இநத ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அர்ஜுன் இருக்கும் வரை ரோஜாக்கு எந்த ஆபத்தும் வராது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த. பிரியா. சாட்ஷியால் ரோஜா உயிருக்கு ஆபத்து என்பதை செண்பகம்மா அர்ஜுனனிடம் சொன்ன வரைக்கும் நல்லது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சாட்ஷி ‌ திவ்யா கண்ணில். செண்பகம்மா படுமுன். அர்ஜுன் அத்தைய காப்பாற்றியது. சூப்பர் என்று கூறியுள்ளார் .மேலும் ரசிகர்கள் பலரும் செண்பகம் சூப்பர் என்றே கூறியுள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது ரோஜா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். செண்பகம் அர்ஜூனிடம் உண்மையை சொன்னதே இதற்கு முக்கிய காரணம் மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: