Tamil Serial Rating : இதை முன்னாடியே செய்திருந்தா எவ்ளோ நல்லாருக்கும்… ஃபீலிங் பாரதி கண்ணம்மா

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாரதிகண்ணம்மா தொடரின் இறுதி வரை ரோஷ்னி நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த மாறி கதையே முண்ணயே கொண்டு போயிருந்த எவ்ளோ நல்லாருக்கும் என கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் அணைய போற விளக்கு பிரகாசமா எரியும் னு சொல்ற மாறி சீரியல் விட்டு போகும் போதுதான் ஓவர் ரொமான்ஸ் என கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் வெண்பா இப்போஅதிகமா பல்பு வாங்குதே எப்படி என்று கேட்டுள்ளனர்.

பாக்யலட்சுமி

கோர்ட்க்கு போறீங்களாக கோபி அங்க ஒரு ஆப்பு உங்களுக்கு இருக்கும் என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அப்பா பார்த்தும் கோபி திருந்தவில்லையே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கோபி எப்போ மாட்டுவாருனு எல்லாம் நினைத்தார்கள் ஆனால் அவர் வீட்டிற்கு தெரிந்தும் இப்படி நடக்கிறதே அப்போ தப்பு செய்தவனுக்கு தண்டனை இல்லையா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இதுக்கு எதுக்கு நீங்க கோபி அப்பாகிட்ட மாட்டிக்கிற மாதிரி சீன் வச்சீங்க அதனால் என்ன யூஸ் என்று கேட்டுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பழையபடி ஒன்னா இருந்தா சரிதான் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படியே போன அங்க எதிர் வீட்டில் இரு ஜீவன் இருக்கே அதை பற்றி யாரும் யோசிக்கவே இல்லையே என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாதான் இருக்காங்க ஆனா வெளியில இருந்து வரவங்கதான் எல்லாரையும் பிரிக்க பிளான் பண்றாங்க என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் வளைகாப்பு முடிந்து கண்ணன் கல்யாணம், பேரு வைக்கிற பங்ஷன் முடிந்து முல்லை கர்ப்பம் அறிவிப்பா என்று கேட்டுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அம்மாவின் பாசமும் மனைவியின் உறுதியும் சரவணனை ஜெயிக்க வைக்கும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சித்து ஹீரோவா போட்டுட்டு எல்லா டைலாக்கும் ஆல்யாவே வே பேசுறா ஹீரோ வையும் கொஞ்ச பேச விடுங்கப்பா என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இனிமேலாவது மாமியார் மருமகள் சந்தோஷமா இருப்பாங்களா இல்ல மறுபடியும் சண்டை வருமா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சித்து நடிப்பை பாராட்டியுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த டைரக்டர் கதையே. எடுக்க தெரியவில்லை அரைத்த மாவை அரைக்கிறார் கதைக்குள் வாங்க. இல்லை என்றால் டி ஆர் பி இன்னும் இறங்கும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ஜூன் சார் நீங்க இருக்கும் வரைரோஜா அக்காவுக்கும் சொண்பகம் அம்மாவுக்கும் ஒன்னும் ஆகாது என கூறியுள்ளார். எத்தனை பேர். சுற்றி நின்று அடித்தாலும் ஜெயிப்பது அர்ஜுன் தானே நல்லவங்களுக்கு. நல்லதுதான் நடக்கும் என்று கூறியுள்ளார்.

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் உண்மையில் ஒரு பெற்ற தாய் இந்த மாறி பெற்ற பிள்ளையே கஷ்ட படுதுனும்னு நினைக்கமாடங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஏற்கனவே மாயன் இதெல்லாம் எடுத்து வச்சிருப்பான்.. அதனடா என்று கூறியுள்ளார். மற்றொருவர் அருமையான கதை ஹீரோவும் நானே வில்லனும் நானே என்று கூறியுள்ளார். போர் அடிக்குது அம்மா செண்டிமெண்ட் இனி வேண்டாம் லவ் எதாவது கொண்டு வாங்க என்று கூறியுள்ளார்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். கண்ணம்மாவின் நடவடிக்கையை பார்த்து வெண்பா கொந்தளிக்கும் இந்த காட்சிக்காகவே ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial rating update with promo video in tamil

Next Story
சாப்பாடுனா பிரியங்கா, அழுகைனா அக்ஷரா.. கொஞ்சம் முன்னுக்கு வாங்க அபிநய் மற்றும் வருண்!Bigg Boss 5 Tamil Kamal Hassan Chinnaponnu Eviction Akshara
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com