New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/11/Tamil-Serisls1.jpg)
Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.
Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.
சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்,
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கதிர் முல்லை ரொமான்ஸ் தொடங்கியாச்சா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் வழக்கமா பேற சீரயல்ல இப்படி ஏதாவது பண்ணாதான் சுவாரஸ்யமா இருக்கும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் வீட்ல பிரச்சனை வர முழு காரணம் முல்லைதான் என்று கூறியுள்ளார். அடுத்து நீங்கதான கதிர் குழந்தைக்கு ரெடியாகுறீங்களா என்று ஒரு ரசிகர் கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படியே போய்க்கிட்யே இருங்க கதைக்கு வந்துடாதீங்க என்று கூறியுள்ளனர்.
பாரதி கண்ணம்மா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாரதிக்கு இனமேதான் ரியல் டெஸ்ட் இருக்கு போல என்று கூறியுள்ளார்.மற்றொரு ரசிகர் பாரதி தான் டிஎன்ஏ டெஸ்ட்க்கு ஓகே சொல்லிட்டாரே அப்புறம் எனன டெஸ்ட் எடுக்கவேண்டிதானே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஹேமா கண்ணம்மாவோட இன்னொரு குழந்தைனு தெரிய வரும்போது பாரதி எப்படி ரியாக்ட் பண்ணுவார் என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கண்ணம்மா சூப்பர் என்று கூறியுள்ளனர்.
பாக்யலட்சுமி
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் குடும்பத்தை பிரிக்க வெளியில இருந்து ஆள் வரவேண்டாம் வீட்ல இருக்க ஆளே போதும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாவம் பாக்யா இப்படியும் பேச முடியாம அப்படியும் பேச முடியாம தவிக்கிறாங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர் ஒருவர் இப்படியே போய்கிகட்டு இருந்தா பாக்யா பிஸினஸ் என்னாகும் என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் செழியன் பண்ணது தப்பு ஆனா அவனுக்கு சப்போர்ட்டா குடும்பமே நிக்குது என்று கூறியுள்ளனர்.
ரோஜா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த. சாட்ஷி எத்தனை தடவைதான். ரோஜாவை கடத்துவது. செண்பகத்தை. கடத்துவது இவள யாராவது கடத்தினால் சூப்பரா இருக்குமே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் எத்தனை நாள் தான் அரைத்த மாவையே அமைப்பார்கள் கடத்தல் காத்தல் காதல் இது தான் நடக்கிறது தொடர்ந்து இதையே காட்டினால் யாரும் பார்க்க மாட்டாங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர் ஒருவர் இப்படியே போன என்ன அர்த்தம் இதற்கு ஒரு முடிவே இல்லையா என்று கேட்டுள்ளனர்.
இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாக்யலட்சுமி சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். செழியனுக்கு சப்போர்ட்டாக பாட்டி பேசியது இதற்கு முக்கிய காரணம் என்று கூறலாம் மற்றடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.