scorecardresearch

Tamil Serial Rating : இப்படியே போனா டிஆர்பி ரேட்டிங் குறைந்துவிடும் டைரக்டர் சார்… ஏதாவது பார்த்து பண்ணுங்க…

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் குடும்பத்தில் மீனா கிளம்பி விட்டார் இனி என்னலாம் நடக்க போகுதோ என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன மீனா நீங்களா இப்படி பேசுரீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் மீனா ஸ்டார்ட் பண்ணீட்டாங்க முல்லை ஏற்கனவே ஸ்டார்ட் பண்ணிட்டாங்க கண்ணன் அல்ரெடி வெளியவே போயட்டான் அடுத்து மூர்த்தியின் ரியாக்ஷன் என்ன என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்னா இருந்தாதா சீரியல் நல்லாருக்கும் என்று கூறியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாக்யா பாரதிக்கிட்ட பேசுனது இவங்களுக்கு எப்படி தெரிஞ்சது என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அதான் பாக்யாவுக்கு கண்ணம்மா பல்பு கொடுத்துவிட்டாங்களே அப்புறம் என்ன என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர் ஒருவர் இப்படியே போய்கிட்டு இருந்தா என்ன அர்த்தம் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பீங்களா மாட்டீங்களா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் ஜவ்வு மாதிரி இழுக்காதீங்க டைரக்டர் சார் சட்டு புட்டுனு முடிச்சு விடுங்க என்று கூறியுள்ளனர்.

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எப்படியும் மாயன் தான் ஜெயிக்க போகிறார் எதுக்கு இப்படி அடித்துக்கொள்கிறீங்கள் என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ரச்சிதாவ கலட்டி விட்டீங்களே பாஸ் ஏன் இந்த முடிவு என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மாயன் இந்த நிகழ்ச்சியில் ஒரு ட்விஸ்ட் வைத்திருப்பார் என்று கூறியுள்ளனர். மேலும்ஒரு ரசிகர் மாயன் மாஸ் ஆன மாறனும் ஹீரோ மாதிரி காமிக்கிறீங்களே என்று கூறியுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எப்படியும் இரண்பேருக்கும் ஒன்னும் ஆக போறது இல்ல ஏன் இப்படி கொண்டுபோறீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படியே போய்கிட்டு இருந்தா டிஆர்பி ரேட்டிங் குறைந்துவிடும் டைரக்டர் சார் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சீரியலை முடித்துவிடவும் என்று கூறியுள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். வெண்பா போலீசில் சிக்குவதே இதற்கு முக்கிய காரணம். மற்றடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial rating update with promo video in tamil