scorecardresearch

Tamil Serial Rating : இதுக்கு ஒரு முடிவே இல்லையா.. ஏன் இப்படி பாக்ற எங்களையும் கொல்றீங்க…

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

Tamil Serial Rating : இதுக்கு ஒரு முடிவே இல்லையா.. ஏன் இப்படி பாக்ற எங்களையும் கொல்றீங்க…

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பேசாமல் வெண்பாவிற்கே முக்கியம் கொடுக்கும் இயக்குநர் வென்பா பாரதி என்று மாற்றிவிடு அதுதான் நீ எடுக்கும் கதைக்கு பொருத்தும். மேலும் ஒரு ரசிகர் இதுக்கு ஒரு முடிவே இல்லையா ஏன் இப்படி பாக்ற எங்களையும் கொல்றீங்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சீக்கிரமா சட்டு புட்டுனு முடிச்சி விடுங்க நீதிபதி மேடம் என்று கூறியுள்ளார். அஞ்சலியை கடத்துறத விட ஹேமா கடத்துனாலும் பாரதி மனசு மாற வாய்ப்பு இருக்கு என்று கூறியுள்ளார்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் செழியன் ஜெனி சேரபோற டைம் வந்தாச்சு வெயிட்டீங் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் யூஎஸ் விசா இவங்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கிதோ அதுவும் இப்போ என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பாக்யா அம்மா பாவம் என்று கூறியுள்ளார். சீக்கிரமா செழியன் ஜெனி 2 பேரும் ஒன்னு சேரனும் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கொஞ்சம் விறுவிறுப்பாக கொண்டுபோனா நல்லாருக்கும் என்று கூறியுள்ளனர்.

ராஜா ராணி  2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த விஷயம் சிவகாமிக்கு தெரியுமா சரவணா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் நீங்கள் இங்க இப்படி அர்ச்சணா அங்க அப்படி ஆனா நீங்க பண்றது மட்டும் எல்லாருக்கும் தெரிஞ்சுடுது என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இந்த சீரியலில் இப்போதான் கொஞ்சம் சந்தோஷம்துளிர்விடுகிறது என்றுகூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சந்தோஷத்தை கண்டினியூ பண்ணுங்க சரவணன் சந்தியா என்று கூறியுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழிழம் சரஸ்வதியும் மகாசங்கமம்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மூர்த்தி எப்போவும் எதார்த்த நடிப்பு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாண்டியன் ஸ்டோர்ஸ் இப்போ சென்னையில் இருக்கு ஆன கடைக்குட்டி கண்ணன் எங்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மகாசங்கமத்தில் கண்ணனுக்கு லீவு விட்டாச்சா என்று கேட்டுள்ளனர்.

ரோஜா

இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் செண்பகம் ரோஜா தான் என்னுடைய மகள் என்று சொன்னாலும் இந்த கிழவி நம்பவே நம்பாது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அன்னபூரணி க்கு இந்த கோபம் உடம்புக்கு ஆகாது என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இந்த பாட்டிக்கு அதிகமான காரத்த போட்டு குடுங்க  என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அண்ணப்பூரணிக்கு எதிராகவே கருத்தக்களை பதிவிட்டு்ளளனர்.

இந்த கருத்துக்களைின் அடிப்படையில் பார்க்கும்போது இன்று ரோஜா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். அண்ணப்பூரணிக்கு காமாட்சி என்ன உண்மையை எடுத்துக்சொல்ல போகிறார் என்ற கேள்வியே இதற்கு முக்கிய காரணம் மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial rating update with promo video in tamil

Best of Express