Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.
சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.
பாரதி கண்ணம்மா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சவுந்தர்யா எதிர்பாராத நடிப்பு சூப்பர் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஒரு சிறந்த கதையை தவறாக கொண்டு சென்று இந்த நாடகத்தை தோல்வியாக்கியதற்கு இயக்குனர் மட்டுமே பொறுப்பு. என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அஞ்சலி நல்லவளாக மாறிய பின் அவள் அழகு வெளி வருகிறது என்று கூறியுள்ளார். எங்களுக்கு நீங்க உதவி செய்யுங்கள் டிஎன்ஏ டெஸ்ட் எடுங்க என்று கூறியுள்ளார். மிகவும் அருமை சௌந்தர்யா மேடம் சூப்பர் என்று ஒருவர் கூறியுள்ளார்.
ராஜா ராணி 2
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இதுதான் எங்களுக்கு எப்போவோ தெரியுமே ஹீரோ ஒரு போட்டியில் கலந்துகிட்ட நிச்சயமா வெற்றி அவருக்குதான் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் தாமு சார் நீங்க இங்கேயும் வந்துவிட்டீர்களா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் சரவணன் தான் ஜெயித்துவிட்டாரே அப்புறம் எதுக்கு சிவகாமி முகம் ஒரு மாதிரி இருக்கு என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இது முன்பே எதிர்பார்த்த ஒன்று என்று கூறியுள்ளனர்.
பாக்யலட்சுமி
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்று கூறியுள்ளார் மற்றொரு ரசிகர் அவன் பொண்டாட்டி கூட இருந்தா உனக்கு என்ன ராதிகா எரியுது... என கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ஒருத்தன் டிஎன்ஏ டெஸ்டு எடுக்காம டைவர்ஸ் பண்றான் இன்னொருத்தன் டிஸைன் டிஸைனா நடிச்சி முன்னாள் காதலிக்காக டைவர்ஸ் பண்றான். இந்த மாதம் டைவர்ஸ் மாதமா.... என ஒரு ரசிகர் கேட்டுள்ளார். என்ன என்ன சொல்றான் பாருங்க கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றான் என ஒருவர் கூறியுள்ளார்.
பாண்டியன ஸ்டோர்ஸ்
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அப்போ கதிர் தம்பிக்கு பணம் கொடுத்துவிட்டாரா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அண்ணி நம்பமாட்டாங்க ஆன அவங்க அப்பா உனக்கு பட்டமே கட்டிட்டாரே என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் கதிர் ஏன் இப்படி உலறுகிறார் என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் ஜனார்த்தனனை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதில் ஒரு ரசிகர் கண்ணன் இனிமே அந்த கடைக்கு வேலைக்கு போக கூடாது என்று கூறியுள்ளார்.
ரோஜா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் செண்பகத்துக்கு பழைய ஞாபகங்கள் வந்தது சந்தோசம். ஆனா ரோஜாவை மறக்காமல் இருந்தால் சரி என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இது எல்லாம் கனவா இல்லை நிஜமா எங்களுக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எபிசோட் என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் செண்பகத்துக்கு அவங்க பெயர் ஞாபகம் வந்தது யாருக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப சந்தோஷம் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் செண்பகம் பழைய நிலைக்கு திரும்பியது மகிழ்ச்சி என்றே கூறியுள்ளனர்.
நாம் இருவர் நமக்கு இருவர்
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சரண்யாவுக்கும் மாயனுக்கு அடுத்த பிரச்சனை ரெடி ஆகிடுச்சி என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சரண்யாவுக்கு வாய் சும்மாவே இருக்காது என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இந்த பிரச்சனை நாளைக்கு பெரிதாக வெடிக்கப்போகிறது என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இனிமேல்தான் திருப்பங்கள் அரங்கேற உள்ளது என்று கூறியுள்ளனர்.
இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். பாரதியின் அம்மா அவனுக்கு செக் வைக்கும் காட்சிக்காக ரசிகர்கள் பலரும் காத்திருக்கினற்னர். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.