scorecardresearch

Tamil Serial Rating : இவங்களையும் ஒன்னா சேர்த்து 6 -10 மணி வரை போடுங்கள்… மெகா சங்கமம் எபெக்ட்…

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர், கண்ணம்மா வீட்டுக்கு எப்போ வரணும்னு டைரக்டர்தான் முடிவு பண்ணணும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சௌந்தர்யா மேடம் மாதிரி மாமியாரின் ஆதரவு அனைத்து மருமகள்களுக்கும் இருந்தால் குடும்பத்தில் சண்டையே வர்றாது.. என கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பாரதிக்கு பழைய கண்ணம்மா தான் வேண்டும் என்று அவர் பார்வையே சொல்கிறது என்று கூறியுள்ளார். கண்ணமாவுக்கு கொஞ்சம் சூடு ,சோரனை இருக்கார மாதிரி காட்டுங்க என ஒரு ரசிகர் கூறியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழும் சரஸ்வதியும்

இந்த ப்ரேமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஸ்வீட் செய்ய ராஜா ராணியையும் பாட்டு பாட மௌன ராகத்தையும் சீர் செய்ய நாம் இருவர் நமக்கு இருவரையும் கோத்து விட்டுருக்கலாம். என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் எல்லா நாடகத்தையும் ஒன்னா ஆக்கி 6 -10 மணி வரை போடுங்கள் டா என கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இது மெகா சங்கமம் இல்ல சூப்பர் மெகா சங்கமம் என்று கூறியுள்ளார். பேசாம விஜய்‌ டிவில உள்ள எல்லா சீரியலையும் சேர்த்து மகா மெகா சங்கமம்னு போடுங்கபா என ஒருவர் கூறியுள்ளார். கோதை இல்லத்தில் பாக்கியலட்சுமி இல்லதரசின் கதை இந்த வாரம் உங்கள் விஜய் டிவியில் என ஒருவர் கூறியுள்ளார்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கோபிக்கு செம்ம நோஸ்கட் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கோபி நீங்க பண்றது மட்டும் நல்லா இருக்க பேரன் பேத்தி எடுக்க போ வயசுல உங்களுக்கு சின்னவீடு கேக்குதா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கோபியை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் போமா சந்தியா உங்க ரெண்டுபேருக்கும் ஒரு பிரைவசி கிடைத்த மாதிரி இருக்கும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் வீட்லே கிடைக்காத இன்வடேஷன் அர்ச்சனா கிட்ட எப்படி கிடைத்ததுனு யாருமே யோசிக்கலையா அவ்ளோ முட்டாளா நீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் காலக்கொடுமை சீரியல்ல மட்டும் வில்லி பண்றது யாருக்குமே தெரியாது அதூன் எப்படினு தெரியல என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படித்தான் கதை வரும்னு முன்னாடியே தெரியும் என்று கூறியுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாட்டி நடிப்பு சூப்பர் வெற லெவல் ரொம்பவே மாறி விட்டார் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பிரியாவின் உண்மை குணத்தை பாட்டி இப்ப தான் புரிந்து கொள்ள ஆரம்பித்து இருக்காங்க. என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் நாளைக்கு எபிசோடு பார்க்க யார் எல்லாம் வெயிட்டிங் என்று கேட்டுள்ளார். பாட்டி இப்போதாவது பிரியாவை இவநம்ம பேத்தி இல்ல பேய்ன்னு புரிந்து. கொண்டது. சந்தோஷம் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பாட்டி. ரோஜாவிடம். பாசத்துடன். பேசியது அருமை பிடிச்சிருக்கு  என்று கூறியுள்ளார். மேலும ரசிகர்கள் பலரும் அண்ணப்பூரணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மாயன் சூப்பர் சீன் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சரண்யா அங்க இருந்து போகட்டும் இப்போதான் நாச்சியார் குடும்பம் உருப்படும் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ஐஸ்வர்யாவுக்கு உண்மை தெரிந்துவிட்டது அடுத்து என்ன நடக்கும் என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சரண்யாவை விமர்சித்து மாயனை பாராட்டியும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது ரோஜா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். அன்னப்பூரணியின் மாற்றம், அனுவுக்கு தண்டனை என சீரியல் பெரும் பரபரப்பாக சென்றுகொண்டிருப்பதே இதற்கு முக்கிய காரணம் மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial rating update with promo video in tamil serials