Advertisment

Tamil Serial Rating : ஒன்னா வாழ்வாங்களாம்... ஆனா இதை மட்டும் பண்ண மாட்டாங்களாம்... என்ன நியாயம்

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : ஒன்னா வாழ்வாங்களாம்... ஆனா இதை மட்டும் பண்ண மாட்டாங்களாம்... என்ன நியாயம்

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஊர்ல உள்ளவர்களுக்கெல்லாம் அன்பு காட்டுறிங்க கூடப்பிறந்த தம்பிக்கும் மட்டும் அன்பு காட்ட மாட்டிங்க.... என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இனி கண்ணன் ஸ்டோர்ஸ் வரும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ஒரு வார கதையை ஒரே‌ ப்ரமோவில்‌ கொடுக்கும்... எடிட்டர்க்கு நன்றிகள் என்று கூறியுள்ளார். ஜீவா கதிர் மைண்ட் வாய்ஸ்.... நீங்க புடுங்கறது பூராவுமே தேவையில்லாத ஆணிதாண்ணே என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பழைய கண்ணம்மா இருந்திருந்தா இந்த சீன் எல்லாம் நல்லா இருக்கும்... பரவாயில்லை இந்த கண்ணம்மாவும் நல்லாத்தான் நடிக்கிறாங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாரதிக்கு இப்பதான் அறிவு கொஞ்சம் எட்டிப் பார்க்குது என்று கூறியுள்ளார். மேலும ஒரு ரசிகர் புது கண்ணம்மா நல்லா தான் நடிக்குறாங்க என்ன ஒன்னு இந்த மாதிரி சீன்க்கு லாம் ரோஷினி இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சேர்ந்து வாழ்வாங்க ஆன டிஎன்ஏ டெஸ்ட் மட்டும் எடுக்கவே மாட்டாங்க என்று கூறியுள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் தீபாளி முடிந்து ஒரு மாதம் ஆக போகிறது இப்போதான் நீங்க தீபாவளி கொண்டாடுறீங்களா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன தலைவன் கோபிக்கு சிரிப்பு எல்லாம் பலமா இருக்கு என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் தீபாவளி முடிஞ்சி ஒரு மாதம் கழித்து சீரியல் தீபாவளியா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் தீபாவளி பண்டிக்கை குறித்து கிண்டல் செய்து வருகின்றனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இப்போ கூட அர்ச்சனா மூஞ்சி தூக்கி வச்சிக்கிட்டு தான் இருக்கு ஆன அதை யாருமே கவனிக்கல என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சீரியலா இருந்தாலும் ஞாயம் வேண்டாமா? போட்டிக்கு போறது ஊருக்கே சொல்லிவிட்டீங்களா என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் வில்லி பண்றது எல்லாம் எப்போ உங்களுக்கு தெரியவரும் சிவகாமி மேடம் என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சீக்கிரம் உண்மையை தெரியப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அனு பிளான் எதுவும் நடக்க கூடாது அர்ஜூன் தான் ஜெயிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பிரியா. போடுற திட்டம் ‌ பலிக்காதே ‌இப்போ ‌‌ பாட்டியின். அருமையான. பேரனும் பேத்தியும்தான். அர்ஜுன் ரோஜா பாட்டியே. பிரியாவோட ‌ சூழ்ச்சியை முறியடிப்பாங்க என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ஆயிரம் எபிசொட் தொட போறாங்க ரோஜா டீம் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அனுவின் திட்டம் பலிக்க கூடாது என்றே கூறியுள்ளனர்.

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சரண்யா ராஜா ராணி 2 சிவகாமி மாதிரி எது நடந்தாலும் அதுக்கு மாயன்தான் காரணம் என்று சொல்வார் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சரண்யாவுக்கு கொஞ்சம் புரிய வைங்க டைரக்டர் சார் ஒட்டு மொத்த குடும்பத்திலேயும் இது மட்டும் தனியா இருக்கு என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சரண்யாவை கடுமையாக விமர்சித்தே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது பாரதி கண்ணம்மா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கோர்ட் உத்தரவின்படி கண்ணம்மாவுடன் வாழ செல்வதும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி கண்ணனை பாராட்டுவதும் இதற்கு முக்கிய காரணம் மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தம் என்று கூறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment