Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.
சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சூப்பர் மீனா நீ சண்டைக்கு சண்டையும் போடுற சமாதானம்மாவும் போற என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் முன்னால சித்துக பாத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் இப்போ குட்டி அண்ணிக்காக பாக்க வேண்டியதாச்சு வெரி நைஸ் குட்டி அண்ணி என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மீனா மீனா தான்...... ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் புகுந்த வீட்டை விட்டுக்கொடுக்காத கேரக்டர் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் குடும்பத்துக்காக எல்லாரும் சீன் போட்டாலும்.குடும்ப பிரச்சினைகளுக்கு சரியான நேரம் சரியான தீர்வு மீனாவால மட்டும் தான் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
பாரதி கண்ணம்மா
இந்த ப்ரேமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பெரிய பொறுமைசாளி விருது இந்த சீரியல் பாக்குறவங்களுக்குதான் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த கண்ணம்மாவை நல்ல "ஏரியாவா" பாத்து வீடு வாங்க சொன்னா, நல்ல "ஏரியா" பாத்து வீடு வாங்கி வைச்சிருக்கா.. என கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் எது எப்படியோ மூணாவது குழந்தைக்கு அடி போட்டுட்டான் அப்பரம் சந்தேகப்பட போரான் பாத்து கண்ணாத்தா சூதானமாக இருந்துக்கோ அப்பரம் மீண்டும் பேக்க தூக்கிட்டு போக வேண்டி வரும் என்று கூறியுள்ளளார். ஆபத்து ஆபத்து மழை தண்ணி வீட்டுக்க வந்திடுத்து என்று பாரதி சொல்ல அதற்கு கண்ணம்மா இரண்டு பேரும் நீச்சல் அடிப்போம் என்று சொல்வதாக கூறியுள்ளார்.
பாக்யலட்சுமி
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் தாத்தா ஈஸ்வரி கேரக்டரை நன்றாக புரிந்து வைத்துள்ளார் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன தாத்தா திடீர்து பாட்டிய இப்படி கலாக்கிறீங்க என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் என கோபி ராதிகாவோட தீபாவளி கொண்டாடியாச்சா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் தாத்தாவும் கோபியும் மோதிக்கொள்வது குறித்து இன்ட்ரஸ்டிங் என்று கூறியுள்ளனர்.
ராஜா ராணி 2
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சந்தியா போன இடத்தில் பிரச்சனையை .இழுத்துவிட்டாரா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன சந்தியா இப்படி பண்ணிட்டீங்களே என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் சந்தியாவுக்கு இப்போ டைம் சரியில்லை என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் என்ன சார் இப்படி பண்றீங்க என்று கேட்டுள்ளனர்.
ரோஜா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் ரோஜா சிரியல் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் தவனைக்கு தவனை இப்படி பாடல் பாடி முதல் இரவு நடக்கவில்லை இப்பவாச்சும் நடக்குமா என கேட்டுள்ளார். ரோஜா அர்ஜூன் இருவருக்கிடையில் 1000 எப்பிசோடு வந்ததற்கான காரணமே அவர்கள் நடிப்பு மிகவும் பிரம்மாண்டமாக கையோங்கியதால் மட்டும்தான் அவர்களுக்கான வாழ்த்துக்களையும் அவர்கள் இருவரின் வாழ்க்கை பயணத்தை சந்தோஷமாக தொடங்க வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.
நாம் இருவர் நமக்கு இருவர்
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கத்தி பிக்பாஸ் டய இருக்காரே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன மாயன் தம்பியவே கடத்திட்டீங்களா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் என்ன மாயன் தம்பியவே கடத்திட்டாரு அடுத்து என்ன நடக்கும் என்று கேட்டுள்ளனர்.
இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். மீனா தனது அப்பாவிடம் கண்ணனுக்கு சப்போர்ட் வாங்கும் சீனுக்காகா ரசிகர்கள் பலரும் வெயிட் பண்ணுவதே இதற்கு முக்கிய காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.