scorecardresearch

Tamil Serial Rating : என்னடா ஒரு வாரமா சீரியல் பிரச்சினை இல்லாம போகுதேன்னு பார்த்தேன் வந்துடுச்சு… கிளப்பிட்டாங்க…

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் நினைச்ச உடனே நடுராத்திரில கிளம்பி வந்துடுவாங்க கண்ணம்மா பறந்து… இந்த வீடு 24 மணி நேரமும் தொறந்து போட்டே கிடக்கும் போல எப்டி இந்த நடு ராத்திரில ரெண்டும் நேரா உள்ள வந்துச்சுங்க என கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் யாருக்கும் தெரியாம ரெண்டு பேரும் எப்படி டா வீட்டுக்குள்ள போனீங்க என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் எங்களை இன்னும் பைத்தியக்காரனவே நினைச்சுட்டு இருக்கீங்க… என்று கேட்டுள்ளார். யாருக்கு எப்படி இருக்கோ… தெரியாது… சௌந்தாயா…சந்தோஷமா இருக்காங்க…உலகில் தலை சிறந்த மாமியார்… என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பழைய கண்ணம்மாவை மிஸ் செய்வதாக கூறியுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எப்பப்பாத்தாலும் ரோஜா ஜெயிலுக்கு போறதுதான் கதையா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ஜுன் ரோஜா சந்தோசம் இந்த தயாரிப்பாளருக்கு பிடிக்கல போல. என்று கூறியு்ளளார். மேலும் ஒரு ரசிகர் என்னடா ஒரு வாரமா சீரியல் பிரச்சினை இல்லாம போகுதேன்னு பார்த்தேன் வந்துடுச்சு. கிளப்பிட்டாங்க என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ஆமா, பார்க்க தான் போறோம் ஏனென்றால் பார்த்து பார்த்து பழக்கமாகிவிட்டது … என்று கூறியுள்ளார். இப்பதான் சீரியல் நல்ல போச்சி மறுபடியும் பழையபடி ஆரம்பிச்சிட்டாங்க என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இப்போதைக்கு இவங்களை சந்தோஷமாக வைக்க மாட்டார் டைரக்டர்….அணுவுக்கும் டிஎன்ஏ டெஸ்ட் ம் எடுக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

அன்பே வா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பரவால டம்மி யா இருந்த வாசு இப்போ டான் ஆய்டாப்ள என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் வாசுகீ, வந்தனா இருவரின் திட்டம் உடைந்து. இரகசியம் வெளிவர வேண்டும் என்று கூறியுள்ளார். பூமிகா வருன் அன்பே வா நாடகத்துக்கு செம்ம ஜோடி என்று ஒருவர் கூறியுள்ளார். வாசுகி ஏற்க்கனவே சில்பா கூட சேர்ந்து கெட்டு போன இப்போ இந்த வந்தனா சேர்ந்து இருக்க இனி உன் நிலைமை என்ன ஆக போகுதோ என்று கேட்டுள்ளார்.

நம்ம வீட்டு பொண்ணு

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்மா அங்க சத்தம் ஹீரோயின் சும்மா பேசிட்டு இருக்கோம் மாமா என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சீரியல் பேரு நம்ம வீட்டு பொண்ணு… நம்ம ஹீருக்கு அந்த பொண்ணு மேல ஒரு கண்ணு… அந்த பொண்ண இம்பிரஸ் பன்ன உருபடிய எதாவது பன்னு.. என கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் தெரியாமா கை பட்டத்துக்கு இப்படி யா…. அப்போ தெரிஞ்சு வச்சி… என்ன ஆகுறது என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பாவம் அந்த மாப்பிள்ளை தலைகாணினு பொண்னை கட்டி புடிச்சிட்டாரு அதுக்கு போய் அடுச்சிட்டாங்க என கூறியுள்ளார்.

மௌனராகம்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எப்படியும் சத்திய பாடி ஜெயிச்சடுவ… இது தான் எல்லாருக்குமே தெரயுமே… எதுக்கு தேவ இல்லம டுவ்ஸ்ட் வைக்கிறிங்க என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் எல்லா சீரியலிலும் ஒரே கதைதான் என்றும், மற்றொரு ரசிகர் போட்டியில் ஸ்ரேயா கோஷல் கலந்து கொள்ளவில்லை…. சத்யா தான்‌ கண்டிப்பா ஜெயிப்பாங்க என்று கூறியுள்ளார். இன்னும் போட்டியே முடியல… அதுக்குள்ள வெளியே போ வெளியே போன்னு… என்று ஒருவர் கூறியுள்ளார்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். பாரதியயும் கண்ணம்மாவும், ஒரே வீட்டில் குழந்தைகளுடன் இருக்கும் சீனுக்காகவே ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கினறனர். மற்றடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial rating update with promo video in tamil serials