scorecardresearch

Tamil Serial Rating : தாலி கட்றாங்க, ஜெயிலுக்கு போறாங்க, கோர்ட்டுக்கு போறாங்க, பரிகாரம் பண்றாங்க,….. ரிப்பீட்டு

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் தனம் அம்மா வீட்டுக்கு போற கேப்ல இங்க குடும்பம் பிரிந்துவிடும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஏன் கதையை இப்படி கொண்டுபோறீங்க வழக்கமான பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்லையே என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் சரி கூட்டிக்கிட்டு போங்க அப்புறம் முல்லை கர்ப்பமானதுக்கு அப்புறம் வாங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் தனம் போய்ட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் என்ன நடக்கும் என்று கேட்டுள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அமிர்தா வேண்டாம்னு சொல்லிட்டா அப்புறம் ஏன் எழில் இங்கயே சுத்திக்கிட்டு இருக்காரு என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன எழில் அமிர்தாவை சம்மதிக்க வைக்காமல் போகமாட்டீங்க போலயே என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் லவ் சொல்லி ரிஜக்ட் பண்ணியாச்சி அப்புறம் என்ன வேலை இந்த வீட்டில் என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் அமிர்தா என்னமா எல்லா லவ் சிக்னால கொடுத்துவிட்டு இப்போ பிடிக்காத மாதிரி நடந்துக்கிறீங்களே என்று கேட்டுள்ளார். மேலும ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து்ளளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மோர் தாத்தா உங்களுக்கு இதெல்லாம் தேவையா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் படத்துலதான் இதே மாதிரி சீன் வைக்கிறாங்கனா சீரியல்லேயும் இப்படியா என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் என்ன பாரதி வேண்டாத பொண்டாட்டிய கார்ல கூட்டிக்கிட்டு சுத்தூறீங்க என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பரவாயில்லை வெண்பா இல்லாத சீன் எல்லாம் நல்லாதா இருக்கு என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் நல்ல சீன் என்றே கூறியுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எங்க போனாலும் ஹீரோவுக்கு நண்பர் கிடைகிறாங்களே இல்லையே வில்லின்களுக்கு எப்படியாவது ஒரு ஆள கிடைக்கிசிடுது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் நீங்க இங்க இப்படி அங்க சிவகாமிக்கு அப்படி இந்த ப்ரோகிராம் எப்படியோ என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சீரியல் ரொம்ப போர் என்று கூறியுள்ளனர்.

ரோஜா

எல்லா வாதத்திலும் எதிர் எதிரே இருந்த அர்ஜுன் & மாணிக்கம் ஒரே வரிசையில் அருகருகே அமர்ந்து இருக்கும் காட்சி அருமை என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இதெல்லாம் முன்னாடியே பார்த்துட்டோம். ஏன் திரும்ப போடுறீங்க என்று கேட்டுள்ளார். இன்னும் கோர்ட் ஸீன் ஆரபிக்கவே இல்ல. அதுக்குள்ள மரண தண்டனையா சபாஷ் என கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் தாலி கற்றாங்க, ஜெயிலுக்கு போறாங்க, கோர்ட்டுக்கு போறாங்க, பரிகாரம் பண்றாங்க,…..ரிப்பீட்டு என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் புதுசா ஏதாவது யோசிங்க பாஸ் என்று கூறியுள்ளார்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது ரோஜா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். ரோஜா சிறையில் இருப்பது அவளை வெளியில் எடுக்க அர்ஜூன் மாணிக்கம் இருவரும் களமிறங்குவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்டுத்தும் என்று கூறலாம.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial rating update with promo video in tamil serials