Tamil Serial Rating : வில்லனுக்கு ஒரு ஆள் இருந்தா.. ஹீரோவுக்கு ஒரு ஆள் வேண்டாமா டைரக்டர் சார்

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : வில்லனுக்கு ஒரு ஆள் இருந்தா.. ஹீரோவுக்கு ஒரு ஆள் வேண்டாமா டைரக்டர் சார்

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாரதி கண்ணம்மா

Advertisment
Advertisements

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணம்மா நீ சூப்பர் மா ...அருமையா நடிக்குறாங்க பா என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த கண்ணம்மா வந்த பிறகு ப்ரமோவும் அடிக்கடி வருது எபிசோடும் நல்லாருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாரதி மாறலாம் கண்ணம்மா மாறலாம் சௌந்தர்யா மாறலாம் வெண்பா மாறலாம் ஆனா கதையும் மாறாது சீரியலும் முடியாது போல என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் சினிமா, சீரியலுல கோடிய வச்சு வெளாடுறாணுங்க...... நமக்கு லட்சத்துக்கே நாக்கு தள்ளுது என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கண்ணம்மாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அடிசக்க... தாத்தா செம்மயா பண்ணிட்டீங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இப்போ கூட ராதிகாவுக்கு கோபி யாருனு தெரியவில்லையே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கோபி இதுக்கெல்லாம் பயப்படுற ஆளா அவர் அடுத்த பிளான்க்கு ரெடியாகியிருப்பார் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் தலைவனை யோசிக்க வச்சிட்டாங்களே என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் தாத்தாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒன்னா சேர இதுதான் அடுத்த சீனா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படி ஒரு ரௌடி பலத்த வச்சிக்கிட்டா சூப்பர் மார்கெட்ல வேலை பாக்குறான் அந்த பையன் என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன சார் கண்ணன இப்டி அடிவாங்க விட்டீங்களே என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் ஒருவர் பாண்டியன் ஸ்டோர்சில் அடுத்த சண்டை விரைவில் என்று கூறியுள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் கண்ணனுக்காக அண்ணன்கள் களமிறங்கும் வாரம் என்று கூறியுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் வில்லனுக்கு ஒரு ஆள் இருந்தா ஹீரோவுக்கு ஹெல்ப் பண்ண ஒரு ஆள் வேண்டாமா டைரக்டர் சார் என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இதுக்கும் அர்ச்சானதான் காரணம் ஆனா இது யாருக்குமே தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் அர்ச்சாவுக்கு இந்த குடும்பத்து மேல ஏன் இவ்வாளவு வெறுப்பு என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ரோஜா செம மாஸ் காட்ராங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மறுபடியும் முதல்ல இருந்தா என்று கட்டுள்ளார். மற்றொரு ரசிகர் யாருப்பா இந்த ரோஜா டைரக்ட்டர்ரு கதை இல்லன்னா முடிச்சு தொலைய வேண்டியது தானா எதுக்கு இப்புடி அரைச்ச மாவவே அரைச்சு இப்புடி ஜவ்வா இழுக்கனும்... என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ரோஜா,,, பாட்ஷாவா மாரீட்டாங்களா என்று கேட்டுள்ளார். மேலும ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்துள்ள நிலையில் ரோஜாவுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது ரோஜா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். ரோஜா ஆக்ஷனில் இறங்கியதும் அனு அடுத்து என்ன செய்ய போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: