Tamil Serial Rating : என்ன தனம்... மூர்த்தி பேச்சையும் மீறி இப்படி பண்றீங்களே..!

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : என்ன தனம்... மூர்த்தி பேச்சையும் மீறி இப்படி பண்றீங்களே..!

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

Advertisment
Advertisements

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன தனம் மூர்த்தி பேச்சையும் மீறி இப்படி பண்றீங்களே என்ன புதுசா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ரைட்டு அடுத்து பிரச்சனை தொடங்க போகுது என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் என்ன மூர்த்தி உங்களுக்கு பெரிய ஷாக்கா இருக்கனுமே என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் தனம் தேவையில்லாம கண்ணன சேர்த்துக்கிட்டு பிரச்சனையை வாங்க போறாங்க என்று கூறியுள்ளார். அடுத்த பிரச்சனைக்கு வழி வந்துடுச்சி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அரோகரா என்று கூறியுள்ளார்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எப்படி இருந்த பாரதிய இப்படி காமெடி பீஸா மாத்திட்டீங்களே சார் என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பரவாயில்லை பாரதி நல்லா காமெடி பண்ணாருல்ல என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன சௌந்தர்யா அம்மா ரெண்டுபேரும் எப்படி இருக்காங்களு பார்க்க வந்தீங்களா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படியே போய்கிட்டு இருந்தா என்ன அர்த்தம் டிஎன்ஏ டெஸ்ட்னு ஒரு கான்சப்ட் இருக்கு அது யாருககுமே ஞாபகம் இல்லையா என்று கேட்டுள்ளார்.  

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் எழில் சூப்பர் பா அமிர்தா ரெஸ்பான்ஸ் பண்ணலன உடனே இனிமே ப்ரபோஸ் பண்ண மாட்டேனு சொல்லிட்டீங்களே சூப்பபு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாக்யா குடும்பத்தில் எல்லாருக்கும் ஒரு பிரச்சனை இருக்கு... கோபிக்கு அவங்க அப்பா பிரச்சினை, அவங்க அப்பாவுக்கு ராதிகா பிரச்சினை, எழிலுக்கு அமிர்தா பிரச்சினை பாட்டிக்கு பாக்யா பிரச்சினை எல்லாமே இப்படியே போய்கிட்டு இருந்தா என்ன முடியு எனறு கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் தலைவன் போகிய இப்படி கட்டி போட்டிங்களே சார் என்று கூறியுள்ளார்.

ராஜா ராணி 2

என்ன சந்தியா கணவரின் ரிப்போர்ட் எங்களிடம் இல்லையா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் எல்லாரும் சேர்ந்துகிட்டு சரவணன் நிம்மதிய பறி்ச்சிட்டீங்களே என்று ஒருவர் கூறயுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன சாரே இப்படி பண்றீங்களே கொஞ்சமாவது விறுவிறுப்பாக கொண்டு போனீங்கனா நல்லா இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இனிமே அதிர்ச்சி தரும் எந்த விஷயமும் சரவணனுக்கு சொல்லக்கூடாது அப்படித்தானே டாக்டர் என்று கேட்டுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இனி சிறப்பான தரமான சம்பவம் இருக்கு.அர்ஜூன் சார் மாஸ் காட்ட போறாரு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ரோஜா நாடகத்தை 2000 எபிசோடுகள் கொண்டு போனால் நிச்சயமாக நல்லா இருக்கும் சந்திரலோகா நாடகம் மாதிரி என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் அப்போ அடுத்த வாரம் முழுவதும் , இதே கோர்ட் , எழவுனு தான் உயிர வாங்க போறீங்களடா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அர்ஜூன் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று கூறியுள்ளனர்.

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மாயன் தப்பிச்சிட்டாரா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர்  ரெண்டு புள்ளைங்க இருக்காங்க யாரு மாயன் யாரு மாறனு உங்களுக்கே தெரியலையா என்ன கதை கொண்டு போறீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் மாயன் தப்பிச்சு வந்துட்டாரு இனி நடவடிக்கை மோசமான இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மாயனுக்கு ஆதரவாகவே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இந்த கருத்தக்களின் அடிப்படையில் பார்க்கும்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். மூர்த்தியை எதிர்த்து கண்ணனை தனம் கூட்டி வந்ததும், ஐஸ்வர்யா இங்கு வந்து என்ன பிரச்சனை செய்ய போகிறார் என்பதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: